ஆபாச தளம் என நினைத்து பிரான்ஸ் பத்திரிகையை தடை செய்த இந்தியா: வெடிக்கும் சர்ச்சை

308
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஆபாச தளங்கள் பட்டியலில் பிரான்சின் பத்திரிக்கையின் பெயர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு ஆபாச தளங்களை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது இந்நிலையில் தடை செய்யப்பட்டுள்ள 857 வலைத்தளங்களில் பிரான்சின் பிரபல பத்திரிகையான லீ டாபைன் லிபெரி (Le Douphine Libere) இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லீ டாபைன் லிபெரி உள்ளூர் மற்றும் பிராந்திய செய்திகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த பத்திரிகையின் இணையதள பக்கம் தடை செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமது பத்திரிகையின் இணையதள பக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக லீ டாபைன் லிபெரி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.

எனினும் செவ்வாயன்று அந்த கட்டுரையை தனது தளத்தில் இருந்து நீக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE