சங்ககரா ஓய்வுக்கு பிறகு இலங்கைக்கு காத்திருக்கும் சவால்: கோஹ்லி

308
அணித்தலைவர் பதவி கூடுதல் நெருக்கடி கிடையாது என இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கொழும்பில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அணித்தலைவர் பதவியும், துடுப்பாட்டத்தையும் இரண்டு அம்சங்களாக கருதுகிறேன்.இரண்டையும் நான் ஒன்றாக கலக்க மாட்டேன். அணித்தலைவர் பதவியால் எனது துடுப்பாட்ட திறமை பாதிக்காது.மேலும், கூடுதல் நெருக்கடி எதுவும் எனக்கு இல்லை. இதற்காக எதையும் மாற்ற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

இந்தியா–இலங்கை இடையேயான டெஸ்ட் தொடர் கடும் போட்டியாக இருக்கும். இரு அணிகளிலும் சிறப்பாக விளையாடக்கூடிய இளம் வீரர்கள் உள்ளனர்.

இலங்கை மண்ணில் இந்திய டெஸ்ட் தொடரை 1993–ம் ஆண்டுக்கு பிறகு வென்றது இல்லை என்பதை நான் பெரிதாக கருதவில்லை. எங்களை பொறுத்த வரை சிறப்பாக விளையாடுவதில் தான் ஆர்வத்துடன் உள்ளேன்.

நான் முதல் முறையாக இலங்கையில் ஒருநாள் தொடரில் ஆடிய போது இலங்கை மண்ணில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டுகள் ஆகிறதே என்று கேட்கப்பட்டது.

அப்போது எனக்கு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. அதேபோல தான் இப்போது எனக்கு எந்த நெருக்கடியும் கிடையாது.

நன்றாக விளையாடுவதற்காகவே இங்கு வந்துள்ளோம், சங்ககரா ஓய்வுக்கு பிறகு இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

SHARE