அரை மணி நேரம் பின்னோக்கி செல்லும் வட கொரியா – ஜப்பானுக்கு எதிரான நடவடிக்கையாம்

332
ஜப்பான் நேரத்தை பின்பற்ற கூடாது என்பதற்காக வட கொரியா தனது நேர அளவை அரை மணி நேரம் பின்னோக்கி அமைக்கப் முடிவு செய்துள்ளது.

1912-ம் ஆண்டு ஜப்பான் கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்த முதல் வட மற்றும் தென் கொரிய நாடுகள், ஜப்பானின் நேரத்தை பின்பற்றி வருகின்றன. ஆனால் வட கொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் பதவி ஏற்றதில் இருந்து பல மக்கள் விரோத மற்றும் வினோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக ஜப்பான் ஏகாதிபத்தியத்தை ஒழிக்கும் வகையாக வரும் ஆகஸ்ட் 15-ம் திகதி முதல், தற்போது இருக்கும் நேரத்திலிருந்து அரை மணி நேரம் குறைக்கும் வகையில் பின்னோக்கி மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த புதிய நேர அளவு பியோங்யாங்(GMT +8.30 ) என்ற பெயரில் அழைக்கப்படும். ஆனால் தென் கொரியா ஜப்பான் நேரத்தையே பின்பற்ற போவதாக அறிவித்துள்ளது

SHARE