25 வளர்ப்பு குழந்தைகளுடன் குலுமணாலி போகிறார் ஹன்சிகா 

532



25 வளர்ப்பு குழந்தைகளுடன் குலுமணாலி போகிறார் ஹன்சிகா.கோடை என்றதும் நட்சத்திரங்கள் கண்ணில் கறுப்பு கண்ணாடி அணிந்துகொண்டு வெளிநாடு அல்லது குளிர்பிரதேசங்களுக்கு சென்று பொழுதை கழிப்பது வழக்கம். நடிகை ஹன்சிகா சற்று வித்தியாசமாக தனது கோடை பயணத்தை திட்டமிட்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த தினத்தன்று ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்ப்பது ஹன்சிகாவின் பாலிசி. இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.தற்போது ‘வாலு பட ஷூட்டிங்கிற்காக பாங்காக் சென்றிருக்கிறார் ஹன்சிகா. அங்கிருந்து திரும்பியதும் 25 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு குலுமணாலி செல்கிறார். இதுபற்றி அவரது அம்மா கூறும்போது, ‘‘குலுமணா லிக்கு 5 நாள் சுற்றுலாவாக தான் வளர்த்து வரும் 25 குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்கிறார் ஹன்சிகா. பிஸியான ஷூட்டிங் பணிகள் இருப்பதால் ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே குழந்தைகளுடன் அவர் பொழுதை செலவிடுகிறார். பிறகு அவர்களை நான் பார்த்துக்கொள்வேன். இதற்கான ஏற்பாடுகளை ஹன்சிகா செய்து வருகிறார். அடுத்த முறை எல்லா குழந்தைகளையும் வெளிநாடு அழைத்து செல்ல எண்ணி இருக்கிறார் என்றார்

 

SHARE