ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர் சங்கக்காரா: ஜெயவர்த்தனே புகழாரம்

365
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், முன்னணி துடுப்பாட்டக்காரருமான சங்கக்காரா பல சாதனைகளை உருவாக்கி வியக்க வைத்தவர் என்று ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.இலங்கை அணியில் சிறந்த பங்காற்றிய சங்கக்காரா ஒருநாள் போட்டிகளில் 14  ஆயிரம் ஓட்டங்களுக்கு மேலும், டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேலும் குவித்துள்ளார்.இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இவரை சிறப்பாக வழியனுப்ப இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதற்கிடையில் சங்கக்காரா பற்றி இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கூறுகையில், நான், அரவிந்த் டி சில்வா ஆகியோர் சிறந்த துடுப்பாட்டக்காரர்கள் தான்.

இருப்பினும் இலங்கை அணியில் சிறந்த துடுப்பாட்டக்காரர் யார் என்றால் நான் சங்கக்காராவை தான் குறிப்பிடுவேன். அவர் ஏராளமான சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

வியக்க வைக்கும் எண்ணிக்கையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 60க்கும் மேற்பட்ட சதங்களை விளாசியுள்ளார் என புகழ்ந்து பேசியுள்ளார்.

SHARE