மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்பு – தமிழகம் கொந்தளிப்பு!

559

modi-rajapaksaநரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பார் என்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து வரும் 26ஆம் தேதி மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் உறுப்பினர்களுக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கண்டிப்பாக பங்கேற்பார் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் பல லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர், இந்த இனப்படுகொலையின் முக்கியக் குற்றவாளியான ராஜபக்சே மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்வது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  ராஜபக்சேவை தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்த மோடிக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

 

SHARE