இந்திய வம்சாவளி தொழிலதிபர் அமெரிக்காவில் கைது: மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

311
அமெரிக்காவில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் யஷ்வந்த் படேல் என்பவர் சிகாகோ அருகே கைது செய்யப்பட்டார்.யஷ்வந்த் படேல் தாம் நடத்தி வந்த கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகக்குறைவான சம்பளம் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.இதன்மூலம் கிட்டும் வருவாய்க்கான கணக்குகளை அரசிடம் தவறாக வழங்கி ரூ.12 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து விசாரணையில் ஈடுபட்ட வருவாய்த்துறை அதுகாரிகள், தங்களிடம் போதிய ஆதாரம் இருப்பதாக கூறி சிகாகோ அருகே வைத்து தொழிலதிபர் படேலை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டும் பதிவு செய்துள்ளனர்.

யஷ்வந்த் படேல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புகள் அதிகமென வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE