எனது கணவரை புலிகள் கொல்லவில்லை மகேஸ்வரன் மனைவி.

524

மாவை சேனா­தி­ராஜா எம்.பி. நேற்று பராளுமன்றில் உரை­யாற்­றிய ­போது அதனை செவி ஒலி­வாங்கி மூலம் கேட்­டுக்­கொண்­டி­ருந்த பிர­தி­ய­மைச்­சர்­க­ளான சரத் வீர­சே­கர மற்றும் லலித் திசா­நா­யக்க உள்­ளிட்ட ஆளும் தரப்­பினர் மாவை எம்.பி.யுடன் வாக்­கு­வா­தப்­பட்­ட­துடன் இடை­யூ­று­கை­ளயும் ஏற்­ப­டுத்­தினர்

ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக நேற்று செவ்­வாய்­க்கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீது உரை­யாற்­றிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. மாவை சேனா­தி­ரா­ஜாவின் உரை மீதான மொழி­பெ­யர்ப்பில் தவ­றுகள் இடம்­பெற்­றி­ருந்­த­தாக அக்­கட்­சியின் எம்.ஏ.சுமந்­திரன் எம்.பி.சபையின் கவ­னத்தை ஈர்த்து சபா­பீ­டத்­திற்கு சுட்­டிக்­காட்­டினார்.

இதே சம­யத்தில் பிர­தி­ய­மைச்சர் லலித் திசா­நா­யக்கவுக்கும் யாழ். மாவட்ட எம்.பி.யான திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்­கு­மி­டை­யிலும் கடும் வாக்குவாதம் இடம்­பெற்­றதை அவ­தா­னிக்­க­ மு­டிந்­தது. இரு­வரும் கார­சா­ர­மாக பேசி ஏசிக்­கொண்­டனர்.

விடு­தலைப் புலி­களை நினைவு கூரு­வ­தற்கே கூட்­ட­மைப்பு முயற்­சிக்­கின்­றது. புலி­களே முன்னாள் அமைச்சர் மகேஸ்­வ­ர­னையும் கொன்­றி­ருந்­தனர் என்று பிர­தி­ய­மைச்சர் லலித் திசா­நா­யக்க தெரி­வித்தார். இத­னை­ய­டுத்து எழுந்த திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் எம்.பி. எனது கண­வரை புலிகள் கொல்­ல­வில்லை யுத்த வெற்றி நிகழ்வில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி பயங்­க­ர­வா­தி­களால் கொல்­லப்­பட்ட தமிழ்த் தலை­வர்­க­ளது பெயர்­களை கூறி­யுள்ளார். அதில் ஜனா­தி­பதி மகேஸ்­வ­ரனின் பெயரை குறிப்­பி­ட­வில்லை.

இதி­லி­ருந்து புலிகள் எனது கண­வரை கொல்­ல­வில்லை என்­பது தெளிவானது என்று தெரி­வித்தார். இத­னை­ய­டுத்து இரு­வ­ருக்­கு­மி­டையில் கடும்­வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது. மாவை எம்.பி.யின் உரை­யின்­ போது ஆளும் கட்­சியின் சிலர் தொடர்ச்­சி­யாக இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­திய வண்ணம் இருந்­தனர்.

அவ­ரது உரையின் நடுவில் ஒழுங்குப் பிரச்­சினை ஒன்றை எழுப்­பிய ஐக்­கிய தேசி­யக்­ கட்சி எம்.பி.யான ரவி கரு­ணா­நா­யக்க மாவை எம்.பி.யின் உரை­யி­னது மொழி­பெ­யர்ப்பில் தவ­றி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டினர்.

இதன்­போது சபை குழப்­ப­க­ர­மா­கவே இருந்­தது. இதற்கு மத்­தி­யி­லேயே மாவை எம்.பி. தனது உரையை நிறைவு செய்தார். மாவை எம்.பி.யின் உரையின் முடிவில் ஒழுங்குப் பிரச்­சி­னையை எழுப்­பிய சுமந்­திரன் எம்.பி. மாவை சேனா­தி­ராஜா எம்.பி.யினது உரை­யினை நான் இரு மொழி­க­ளிலும் செவி­ம­டுத்­துக்­கொண்­டி­ருந்தேன்.

எனினும், மொழிபெயர்ப்பில் முரண்பாடு இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. என சபைக்குத் தலைமை தாங்கிய ஜானக பண்டார கவனத்திற்கு கொண்டுவந்தார். இதற்குப் பதிலளித்த ஜானக பண்டார எம்.பி. இது தொடர்பில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.

SHARE