த.தே.கூட்டமைப்பை பல்வேறு கட்சிகளாக உடைப்பதே அரசின் திட்டம்

798

 

கடந்த பத்தாண்டு காலங்களுக்கு மேலாக, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை எவ்வாறு உடைப்பது என்று அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி இற்றைக்கு ஓரளவு சாத்தியமாகிக்கொண்டு வருகின்றது என்றே கூறவேண்டும். காரணம் என்னவென்றால், தமிழ்த்தேசியக்கூட்டமை ப்பிலுள்ளவர்கள் ஒரு தீர்மானத்தினை எடுக்கும் பொழுது கூட்டாக எடுப்பதில்லை. இதில் குறிப்பிட்ட ஒரு சிலர் மாத்திரமே அங்கம் வகித்துக்கொள்கின்றனர்.

sampanthan_a

இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இலங்கையரசு, பிரபாகரனையும் பிரித்த உத்வேகத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் பிரித்து விடலாம் என்று சுலபமாக நினைத்து செயற்பட்டுவருகின்றது. இவ்விடயம் தமிழரசுக்கட்சிக்கு தெரியாதது அல்ல. விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நிலைப் பாடானது விடுதலைப்புலிகள் கூறுவதைச் செய்யும் வகையிலேயே அமைந்திருந்தது.

அதன்பின்னர் மேற்கத்தேய நாடுகளின் தலையீட்டின் காரண மாக இந்தியா தனது மூக்கை நுழைத்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உள் வாங்கிக் கொண்டது. விடுதலைப் புலிகளினுடைய ஆலோசனையற்ற காலப்பகுதியில் இந்திய அரசா னது இலங்கையரசின் ஊடாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தனக் கேற்ற வகையில் பயன்படுத்திக்கொண்டது.

இந்தியா எமக்கு உதவி செய்யும் என சம்பந்தன் ஐயாவின் ;வாயால் கூறியபோதும், அதே வாயால் இந்தியா துரோகம் இழைத்துவிட்டது எனக்கூறினார். தற்பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சுக்கு நூறாக்குவதில் இலங்கையுடன் இணைந்து இந்தியா செயற்படும் விதம் கசியத்தொடங்கியுள்ளது.

தமிழீழவிடுதலைப்புலிகள் உட்பட ஏனைய இயக்கங்களையும் எவ்வாறு ஆரம்பகட்டத்தில் இந்தியாவின் ரோ உடைத்து அதில் வெற்றி கண்டதோ அதேபோன்றதான ஒரு பாணி யில், தற்பொழுது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆயுதக்குழுக்களை தமிழரசுக்கட்சியுடன் அணுகி அவர்களை சின்னாபின்னமாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதற்கு தமிழரசுக்கட்சி உடந்தையா?

கட்சிக்குள் நடைபெறுகின்ற தீர்மானங்கள், கலந்துரையாடல்களைப் பார்க்கின்றபொழுது, அவ்வாறே என்று கூறப்படுகின்றது. குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே கடந்த வடமாகாணசபைத்தேர்தலின் பொழுது, மாகாணசபைத்தேர்தலுக்காக தத் தம் பிரதிநிதிகளை தெரிவுசெய்து மாகாணசபைக்கு அனுப்பியது.

ஆனால் இன்று இந்த மாகா ணசபையில் அங்கம் வகிப்போர் நாம் தமிழரசுக்கட்சியின் பால் வந்தவர்கள் என்று கருதுகின்றார்கள். மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையும் அரசுடன் நழுவிப் போகும் அரசியலையே தற்பொழுது செய்துவருகின்றார் என லாம்.

இரா.சம்பந்தன் அவர்களைப் பொறுத்தவரையில், மக்களுக்குச் சொல்வது ஒன்று அரசிற்கு சொல்வது ஒன்று. மக்கள் தெரிவுசெய்து எம்மை பாராளுமன்றத்தில் அமர்த்தியிருக்கின்றார்கள் என்பதனை பதவியில் அமர்ந்துகொண்ட பின் மறந்துவிட்டார்கள். இவர்களை மாகாணசபைத்தேர்தல் களத்தில் நிறுத்திய கட்சியையும் மறந்துவிட்டார்கள். இப்பொழுது இவர்கள் கண்களுக்கு தெரிவது அவர்களுடைய பதவிதான் என்கின்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். கூட்டாக இணைந்து ஒரு தீர்மானத்தினை எடுக்கும் காலத்தில் வௌ;வேறாக பிரிந்து தீர்மானங்களை எடுக்கின்றார்கள்.

நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலின்போது, அரசின் ஆதரவு டனும் ஒருசிலர் தமிழரசுக்கட்சியின் சார்பாக போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் அரசுடன் ஆரம்பகட்டத்திலிருந்து நண்பர்களாகவும், கடந்த பல நாட்களில் தொடர்புகளையும் வைத்திருந்தவர்களாவர்.

1996ம் ஆண்டு வடகிழக்குப் பகுதியில் தீவிர யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தமிழரசுக்கட்சியின் நிலையை எடுத்துக்கொண்டால், புலிகளின் இராஜதந்திரிகள் என்றே கூறப்பட்டனர். ஆனால் சம்பந்தன் அவர்களைப் பொறுத்தவரையில் அப்போதும் அவர் அரசிற்கு ஆதரவாகவே செயற்பட்டுவந்தார். குண்டு துளைக்காத வாகனமும் அக்காலத்தில் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது.

அப்போது சம்பந்தன் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான வராகவே காணப்பட்டார். தற்பொழுது விடுதலைப்புலிகள் இல்லை தமிழரசுக்கட்சயில் உள்ளவர்களாகிய நாங்கள் சொல்லும் விடயத்தையே நீங்கள் கேட்கவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டிற்கு இலங்கையரசு இவர்களைத் தள்ளிவிட்டது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக்கூட்டணி தற்போதைய சிறிரெலோ, ஈழவர் ஜனநாயக முன்னணி என்று தமிழ் மக்களுக்கு குரல்கொடுக்கக்கூடிய பல கட்சிகள் இருக்கின்ற இந்நிலையில், அதிகமானவர்கள் அரசின் கைக்கூலிகளாகவே செயற்பட்டுவருகின்றனர்.

ஆரம்ப காலகட்டத்திலும் அரசின் கைக்கூலிகளாக செயற்பட்ட இயக்கக்கட்சிகள் தற்பொழுது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இணைந்துகொண்டிருப்பது ஆபத்தானது என்ற கூற்றை, இலங்கை – இந்திய அரசுகள் இரா.சம்பந்தனின் தலை யில் வைத்துவிட்டது. இந்தியா கூறும் விடயங்களை செயற்படுத்தும் செல்லப்பிள்ளையாகவும் சம்பந்தன் அவர்கள் இயங்கிவருகின்றார்.

44

தமிழ்மக்களுக்கெதிரான அடக்கு முறைகளை இலங்கையரசு 1983 – 2000 வரையான காலப்பகுதியில் மேற்கொண்டபோது, அதனை தட்டிக்கேட்கவும், அரசிற்கு நெருக்கடிகளைக் கொடுக்கவும் ஒரு தலைவன் இருந்தார். அத்தலைவனின் வீரம் இன்றுதான் மக்களுக்கு புரி கிறது. தற்போதைய காலகட்டத்தில் தமிழ்பேசும் மக்களாகிய முஸ்லிம்கள் மீதும் இலங்கையரசு பிரிவினைகளை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிவாசல்கள் உடைக்கும் பொழு தும், மதச்சுதந்திரத்தை சூறையாடும் பொழுதும், பாராளுமன்றத்தில் அமைச்சரவை அங்கம் வகிக்கும் முஸ்;லிம் அமைச்சர்கள் மௌனிப்பது போன்றே, தற்பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் மௌனித்துவருகிறது. விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலில் ஒடுக்கப்பட்டு உக்கிரப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் தமிழ்மக்களுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாத அளவிற்கு இலங்கையரசினால் கடிவாளம் போடப்பட்டது. அது ஒரு காலம். ஆனால் இன்று அவ்வாறில்லை. தற்பொழுது சுதந்திரம் என்று கூறிக்கொள்கிறது அரசு.

இக்காலகட்டத்தில் தமிழரசுக்கட்சிக்குள் ஏன் பிரிவினைகள் ஏற்படவேண்டும். அதற்கான வழிவகைகளை ஏன் இவர்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அரசு எவற்றைக் கூறுகி றதோ அவற்றிற்கெல்லாம் வெறும் அறிக்கைகள் மட்டும் விடுத்துக்கொண்டு, செயற்பாடுகளை செயற்படுத்த முடியாமல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இருக்கின்றது என்றால் அதனது அர்த்தம் என்ன?

செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், ஸ்ரீதரன், மாவைசேனாதிராஜா, சரவனபவான், சுரேஸ் பிரேமச்சந்திரன், போன்றோர் காரசாரமான அறிக்கைகளை விடுவார்கள். அதன் பின்னர் கட்சித்தலைமைகளிடம் வினவுகின்றபொழுது, அது அவர்களின் தனிப்பட்ட கருத்து, அதனை அவர்களிடமே கேட்கவேண்டும் அல்லது யூகங்களுக்கு பதில் கூறமுடியாது என அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் கூறிவி டுவார்.

இதற்கான காரணங்கள் என்ன வென்றால், கட்சிகள் ஒருமித்து ஏகோபித்த முடிவு எடுப்பதில்லை. வடமாகாண சபைத் தேர்தல் முடிவுற்றதோடு மாகா ணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனையும் அரசு திட்டமிட்டு அவர்களுடைய ஆதரவாளர்களை வேட்பாளர்களாக நிறுத்தியதன் காரணமாக அதில் வெற்றியும் கண்டது.

தற்பொழுதும் கூட தமிழரசுக்கட்சியில் உள்ளவர்கள் பலர், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ளவர்கள் பலர் இன்னும் அரசி யலில் அரசுடன் பின்கதவு வைத்துச் செயற்படுகின்றார்கள். சம்பந்தன் அவர்களைப் பொறுத்தவரையில், அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறும் வரை தமிழ்மக்களுக்கான எந்தவொரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை. தமிழரசுக்கட்சியின் கருத்தின்படி, கூட்டமைப்பை பதிவுசெய்வதாயின் அனைத்து இயக்கக்கட்சிகளும் ஒரு பெயரின் கீழ் வரவேண்டும். அதன்படி புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமி ழர் விடுதலைக்கூட்டணி, ரெலோ என்றெல்லாம் இல்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார். இவ்வாறான திட்டத்திற்கு ஏனைய கட்சிகள் ஒருபோதும் உடன்படமாட்டார்கள்.அவ்வாறு இணையமாட்டார்கள் என்பதும் இலங்கையரசிற்குத் தெரியும்.

இதனையே சாதகமாக வைத்து இலங்கையரசு கட்சிக்குள் பிரிவினை களை உருவாக்கி தனது அரசியல் நடவடிக்கைகளை நகர்த்திச்செல்கின்றது. அண்மைக்காலமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நடவடிக்கைகள் நாடுகடந்த தமிழீழ அமைப்பு உட்பட 16 அமைப்புக்களை தடைசெய்ததன் பின்னர் அவர்களுடைய செயற்பாடுகள் குறை வாகவே காணப்படுகின்றது.

16 – 18 செப்டெம்பர் 2002 சதாஹிப் நாவலபேஸ், தாய்லாந்தில் வடக்கு கிழக்கில் மனிதநேயங்கள் தொடர்பான ஒரு சந்திப்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பங்குபற்றியிருந்தது. ஆனால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் எவரும் பங்குபற்றவில்லை. இதேபோன்று 31 ஒக்டோபர் – 3 நவம்பர் 2002 வரை பாங்கொங் ரோஸ் கார்டன், தாய்லாந்தில் மனிதநேயம் தொடர்பாகவும் அரசியலி னுடைய நிலவரங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. 2-5 டிசம்பர் 2002 ஒஸ்லோ, நோர்வேயில் அரசியல் தொடர்பாக மாவட்டங்களை ஒன்றிணைப்பதற்கான பேச்சுக்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. 6-9 ஜனவரி 2002 ரோஸ் கார்டன், பாங்கொக்கில் மனிதநேயம் தொடர்பான செயற்பாடுகள் மாவட்ட ரீதியாக முன்மொழிந்துவைக்கப்பட்டது. 7-8 பெப்ரவரி 2003 பேர்லின், ஜேர்மனியில் மனிதநேயங்கள் தொடர்பாகவும், உறவு களை வலுப்படுத்துதல் தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்பட்டது, 18-21 மார்ச் ஹக்கோன், ஜப்பானில் திகதிகள் தீர்மானிக்கப்பட்டபோதும் பேச்சுக்கள் நடத்தப்படவில்லை. 18 ஓகஸ்ட் பரிஸ், பிரான்ஸில் நாட்டின் ஒழுங்கு மற்றும் நிர்வாகங்கள் தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்றது.

இந்த ஏழு பேச்சுகளில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பங்கு பெறவில்லை அதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவுமில்லை. காரணம் அப்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை மீறி எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட முடியாதளவிற்கு இருந்தது. காலப்போக்கில் நிலை மைகள் மாறிவர, அக்காலகட்டத்தில் அரசிற்கு விசுவாசமாக செயற்பட்டுவந்த இரா.சம்பந்தன் அவர்கள், விடுதலைப்புலிகளின் யுத்தத்தினால் தீர்வு கிடைக்கப்போவதில்லை…
12 ஆம் பக்கம் பார்க்க…
என நினைத்தாரோ என்னவோ … சந்தர்ப்பம் இதுதான் என அதிகாரத்தினை கையிலெடுத்துக்கொண்டு தற்பொழுது செயற்பட்டுவருகின்றார்.

இவர்களுடைய அரசியல் தந்திரம் இளமைப்பருவம் உடைய ஒருவர் மண்டைபழுத்துப்போகும் வரைக்கும் தமிழ்த்தேசியம், தன்மானம், தமிழ்த்தேசிய உணர்வு இப்படி பேசிப்பேசியே சென்ற வரலாறுகள் தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் எஞ்சியுள்ளது. அரசாங்கம் தம்மிடையே பல பிரிவுகளை உருவாக்குகிறது என தெரிந்து செயற்படுகிறார்களா? அல்லது இன்னும் அறியாதவர்களாக இருக்கின்றார்களா? என்பதும் மக்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

இலங்கையரசினைப் பொறுத்த வரையில், ஜே.வி.பி, பொதுபலசேனா, ராவணபலய, ஐக்கியதேசியக்கட்சி போன்ற கட்சிகளாக இருந்தாலும் சரி நாடு என்ற வகையில் ஒரே கொள்கையில் உள்ளன. அதாவது பௌத்த நாடு. பௌத்தர்களுக்குரியது. இதனை நாம் சிறுபான்மையினருக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என்பதில் குறியாக செயற்பட்டுவருகின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தினரை எடுத்துக்கொண்டால் கூட தமது ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூட தமது நாட்டின் ஒற்றுமையைக் காட்டிநிற்கின்றது. அந்த வகையில் ஒற்றுமையை சீர்குலைக்க அரசு பேச்சுக்களை நடத்துகின்ற வேளையில் அதற்கு நாம் தலையசைப்போமாகவிருந்தால், எம் தமிழ்மக்களின் தலையில் நாமே மண்னை அள்ளிப்போடுவதற்கு ஒப்பான செயலாகும்.

வெளிநாட்டு உதவிகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கே தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புகொள்ளக் கூடாது என்று வர்த்தமானி அறிவித்தல் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெரிதும் எதிர்பார்க்காதளவிற்கான சம்பவமே இது. ஒருசிலவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூறாத விடயங்களைக்கூட பதிவுசெய்யப்படாத பல இணையத்தளங்களில் செய்திகள் வெளிவருகின்றன. இதுவும் அரசாங்கத்தினுடைய சதித்திட்டங்கள் என்று கூறப்படுகின்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் இதுவரையில் தமிழ்த்தேசியத்திற்காகவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் குரல்கொடுத்து வந்த காலம் கடந்து அரசு கொடுக்கும் உயர் பதவிகளுக்காக, பணத்திற்காக அல்லது உயிர் அச்சுறுத்தல்களுக்காக தமது துணிகரமான அரசியலை, தமிழ் மக்களின் விடிவுக்கான அரசியலை செய்யமுடியாதிருப்பது கவலையளிக்கின்றது. அரசாங்கம் எத்தனை தடைகளை விதித்தாலும் மீள மீள எழுபவன் தமிழன் என்கின்ற கோட்பாட்டின் கீழ் செயற்படுவது எம் இனத்திற்கு நல்லது. இல்லாவிட்டால் நீங்களே தூக்கைமாட்டி தொங்கிக்கொள்ளுங்கள்

இரணியன்

1111

 

 

 

 

SHARE