இந்திய அணியை திணறடித்த ஹேராத் புதிய சாதனை

393
இந்திய அணியை தனது பந்துவீச்சு திறமையால் திணற வைத்த ஹேராத், 3வது அதிக விக்கெட் கைப்பற்றிய இடதுகை சுழற்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹேராத் 48 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றியில் பெரும் பங்கு பெற்றார்.

61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இடதுகை பந்துவீச்சாளரான ஹேராத் மொத்தம் 270 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் இந்திய வீரர் பிஷன்சிங் பெடியை முந்தியுள்ளார். அவர் 67 டெஸ்ட் போட்டிகளில் 266 விக்கெடடுகளை வீழ்த்தியிருந்தார்.

இடதுகை பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் வரிசையில் நியூசிலாந்தை சேர்ந்த வெட்டோரி ( 362 விக்கெட், 113 டெஸ்ட்) முதலிடத்தில் இருக்கிறார்.

டெரிக் ஆன்டர்வுட் (இங்கிலாந்து) 297 விக்கெட் கைப்பற்றி 2வது இடத்தில் உள்ளார்.

SHARE