அதிபர் தேர்தலில் ரூ.6,500 கோடி வரை செலவிடத் தயார்: குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்

294
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தமது சொந்த பணத்தில் இருந்து செலவிடப் போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் டிரம்ப், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டி வருகிறார்.கட்சியினரிடையே அதிக ஆதரவைப் பெற்றவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற நிலையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பலரும் போட்டியிடுவதில் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் தேர்தல் செலவுக்காகப் பெரும் தொகையைத் திரட்டி வருகின்றனர்.

இதில், தொழிலதிபர்கள் பலரும் பெரும் தொகைகளை நன்கொடையாக அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமது சொந்தப் பணத்தையே தேர்தலில் செலவு செய்ய முடிவு செய்திருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

மேலும், நன்கொடை அளிப்பவர், பிரதி பலனை எதிர்பார்ப்பார் எனவும், ஆண்டுக்கு ரூ.2,600 கோடி வருவாய் ஈட்டுவதாகவும், தேர்தலில் 6,500 கோடி செலவானாலும் அதற்கு தாம் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பின்படி, குடியரசுக் கட்சி வேட்பாளர்களிடையே 22 சதவீத ஆதரவு பெற்று, டொனல்டு டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE