55 பயணிகளை பலி வாங்கிய விமான விபத்திற்கு நிர்வாகமே காரணம்: உயிர் பிழைத்த பயணிகள் குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு)

306
பிரித்தானிய நாட்டில் நிகழ்ந்த விமான விபத்திலிருந்து தப்பிக்க முடியாமல் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்ததற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என விபத்தில் உயிரிழந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து 56 பயணிகள் மற்றும் இரண்டு விமான குழுவினருடன் British Airtours என்ற பயணிகள் விமானம் கடந்த 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் திகதி புறப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர், விமானம் ஓடுதளத்தில் செல்வதற்கு தயாராக இருந்த வேளையில், திடீரென அதன் என்ஜினில் தீவிபத்து ஏற்பட்டது.

இதனால், விமானத்தை மேலே எழுப்பும் முயற்சியை விமானி கைவிட்டுள்ளார். அதே சமயம், விமானத்தின் பின் பகுதி தீயிற்கு இரையாக விமானம் முழுவதும் பரவ தொடங்கியது.

இந்த ஆபத்தான நிலையில் கூட விமானத்தின் கதவினை திறந்து விட வில்லை. மேலும் விமான நிலையத்திலிருந்தும் உடனடியாக யாரும் மீட்பு பணிக்கு வரவில்லை.

விரைவாக செயல்பட்டிருந்தால், விமானத்தில் இருந்த அத்தனை பயணிகளை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், கதவினை திறக்காததால் இரண்டு விமான குழுவினர் உள்பட 53 பயணிகள் விமானத்திற்கு உள்ளேயே உடல்கள் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த பயங்கரமான விபத்திற்கு விமான நிறுவனமோ அல்லது விமான நிலைய அதிகாரிகளோ வருத்தம் மட்டுமே தெரிவித்தனரே தவிர மன்னிப்பு கோரவில்லை.

எதிர்வரும் ஆகஸ்ட் 22ம் திகதி இந்த விபத்து நடந்து 30ம் ஆண்டை அனுசரிக்க உள்ளனர்.

இந்த விபத்திலிருந்து John Beardmore என்ற நபரும், அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இது குறித்து அவர் பேசியபோது, விபத்துக்குள்ளான விமானம் உண்மையிலேயே பயணத்திற்கு தகுதியானது அல்ல. அதனுடைய என்ஜிகள் பல முறை கோளாறு ஆன சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இவை அனைத்தையும் அறிந்து, அந்த விமானத்தை பயன்பாட்டில் வைத்திருந்தது மிகப்பெரிய தவறாகும். நாங்கள் உயிர் பிழைத்து ஓடுபாதையில் கிடந்த சமயத்தில் கூட எங்களை மீட்க அதிகாரிகள் வரவில்லை.

எனவே, இந்த விமான விபத்திற்கு விமான நிலைய அதிகாரிகளும், விமான நிறுவனமும் தானாக முன்வந்து மன்னிப்பு கோர வேண்டும். அது மட்டுமில்லாமல், இந்த விமான நிலையத்தில் தற்போது வரை பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு அதனை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என John Beardmore வலியுறுத்தியுள்ளார்.

SHARE