கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் மிக இளவயது கனடிய பெண்.

323

கனடா- நியு பிறவுன்ஸ்விக்கை சேர்ந்த 12வயது பெண் 15கிலோ மீற்றர்  Northumberland நீரிணையை நீந்தி கடந்த மிக இளம் பெண் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளாள்.
12வயதுடைய புறூக்லின் டத்றைட் என்ற இவள் கேப் யுறிமெயின், நியு பிறவுன்ஸ்விக்கிலிருந்து போடன்-காளெட்டோன், பிறின்ஸ் எட்வேட் ஐலன்ட் வரை நான்கு மணித்தியாலங்களில் நீந்தி கடந்துள்ளார்.
ஒரு தருணத்தில் சமுத்திர தண்ணீரை தாண்டி செல்வது கடினமாக இருந்ததென தெரிவித்த போதிலும் ஆனால் அதையும் தாண்டி சென்று குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக முடித்துள்ளாள்.
இது ஒரு அழகான பெரிய அனுபவம் என கூறினாள்.
நோவ ஸ்கோசியாவில் உள்ள தீராத வியாதியால் பாதிக்கப்பட்ட நீடித்த நிலையில் அல்லது விசேட தேவைகள் கொண்ட சிறுவர் முகாமான Bridadoon Village facility-ற்கு நிதி திரட்டும், கிட்டத்தட்ட 50 நீச்சலாளர்கள் பங்குபற்றும் அணியில் டத்றைட்டும் ஒருவர்.
இவளது தாயார் கின்னஸ் சாதனை புத்தகத்தில் Northumberland நீரிணையை நீந்தி கடந்த இளம் சாதனையாளர் என்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பார் என பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
முகாமில் உள்ள 150 சிறுவர்களிற்கு அனுப்ப இந்த வருடம் 150,000டொலர்களை திரட்டுவது இலக்காக உள்ளது.  தான் 1,600 டொலர்களை திரட்டியதாக டத்றைட் கூறினாள்.

girlgirl1

 

SHARE