சிறந்த சுற்றுலா தலங்களில் முதலிடத்தில் அங்கோர் வாட்: தாஜ்மகாலின் இடம் என்ன?

299
உலகின் சிறந்த 500 சுற்றுலா தலங்கள் குறித்த பட்டியலில் கம்போடியாவின் அங்கோர் வாட் முதலிடத்தை பெற்றுள்ளது. சீனா பெருஞ்சுவர், இந்தியாவின் தாஜ்மகால் ஆகியவை முதல் 5 இடங்களுக்குள் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா தொடர்பான ஆலோசனை புத்தகங்களை அவுஸ்திரேலியாவை சேர்ந்த லோன்லி பிளானட் (Lonely Planet) நிறுவனம் வெளியிட்டு வருகிறது.இந்நிலையில் உலகளவில் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 500 சுற்றுலா தலங்கள் குறித்த விபரங்களை அந்நிறுவனம் வெளியிட முடிவு செய்தது.

இதனையடுத்து சிறந்த பயண குழுவினர் மற்றும் சுற்றுலா தொடர்பான ஆலோசனைகள் வழங்குபவர்கள் ஆகியோர் மூலம் பட்டியலை தயார் செய்தது.

சமீபத்தில் அந்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கம்போடியாவின் அங்கோர் வாட் கோவில் முதலிடத்தை பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெரும் தடுப்புப் பவளத்திட்டு, பெரு நாட்டின் மச்சூ பிச்சூ, சீனா பெருஞ்சுவர், இந்தியாவின் தாஜ்மகால் ஆகியவைகள் முறையே 2 ,3,4, மற்றும் 5ம் இடங்களை பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தில் உள்ள 34 இடங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE