மோடியின் பயணத்துக்கு அதி நவீன பிஎம்டபிள்யூ கார் ஏவுகணைகள், வெடி குண்டுகள் போன்றவற்றின் வெப்பம் தாக்க முடியாத அளவுக்கு வெப்ப தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

566

715c1ee2-6100-474e-9746-bb1939cdcb44_S_secvpf

பிரதமராக நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்ற பின்பு அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஐ) ஆலோசனை நடத்தி வருகிறது.

நரேந்திரமோடிக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாவலர்கள், வீடு – அலவலகங்களுக்கான பாதுகாவலர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.

மேலும் நரேந்திரமோடி பயணம் செய்வதற்கு அதி நவீன முறையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார் தயார் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் பாதுகாப்பானது. இந்த காரை துப்பாக்கி குண்டுகள் துளைக்காது. கண்ணி வெடியில் சிக்கினாலும் நொறுங்காத அளவுக்கு பலம் பொருந்தியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கார் நீண்ட தூரம் பயணம் செய்யக் கூடிய வகையில் அதன் டயர்கள், பொருத்தப்பட்டுள்ளது. ஏவுகணைகள், வெடி குண்டுகள் போன்றவற்றின் வெப்பம் தாக்க முடியாத அளவுக்கு வெப்ப தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

வெடிகுண்டு போன்ற எந்த தாக்குதலின் போதும் பெட்ரோல் டேங்க்குகள் வெடித்து சிதறாது. காரின் உள்ள கேஸ் தடுப்பு அமைப்புகளும், தேவைப்படும் சமயங்களில் ஆக்ஸிஜன் சப்ளை செய்யக்கூடிய வசதிகளும் உள்ளன.

மோடி தற்போது ஸ்கார்பியோ காரை பயன்படுத்துகிறார். அந்த காரில் தான் ஜனாதிபதி மாளிகைக்கு பதவி ஏற்பு விழாவுக்கு வருகிறார். அவர் பதவி ஏற்றதும் பிஎம்டபிள்யூ காரில் அழைத்துச் செல்ல சிறப்பு பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.

இந்த காரை மோடி பயணத்துக்கு அப்படியே பயன்படுத்தலாமா? அல்லது மாற்றம் செய்யலாமா? வேறு புதிய காரை தேர்வு செய்யலாமா? என்று சிறப்பு பாதுகாப்பு படை ஆலோசனை நடத்தி வருகிறது. மோடி நீண்ட காலமாக மகிந்திரா ஸ்கார்பியோ பயன்படுத்தி வருகிறார். பிரதமரானதும் அந்த கார் அவரது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மோடி பயணம் செய்யும் போது 9 பிஎம்டபிள்யூ கார்களில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், கமாண்டோ படையினர் செல்வார்கள். அதில் ஒன்று மோடி பயணம் செய்யவும் மற்றொன்று மாற்று வாகனமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவரது பாதுகாப்புக்கு கமாண்டோ படை வீரர்கள் உடன் செல்வார்கள். இந்த கமாண்டோ படையில் குஜராத் போலீஸ் படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் நரேந்திரமோடி பயணம் செய்யும் அந்த கார் முன் இருக்கையில் ஓட்டுனரின் அருகில் குஜராத் போலீஸ் படையைச் சேர்ந்த ஒருவர் தான் அமர்ந்து இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மோடியின் வெளியூர் பயணத்துக்கு ஏர் இந்தியாவின் விமானம் ஒன்றும் தனியாக அமர்த்தப்படுகிறது. இதில் அதி நவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு இருக்கும்.

SHARE