குழந்தையை நீச்சல் குளத்தில் வீசி துன்புறுத்திய தந்தை: அதிர்ச்சியில் உயிரிழந்த குழந்தை (வீடியோ இணைப்பு)

313
ஹொட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குழந்தையை பல முறை வீசி துன்புறுத்தியதால் அதிர்ச்சியில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவில் Morelia பகுதியில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஹொட்டலின் சிசிடிவி கெமராவில் பதிவான இந்த காட்சியில், குழந்தையின் தந்தை நீச்சல் கற்றுக் கொடுக்கும் பாவனையில் குழந்தையை பல முறை குளத்தில் தூக்கி வீசுவதாக தெரிகிறது.

குழந்தை தண்ணீரில் மிதக்க கடுமையாக முயன்று பார்ப்பதையும், அந்த தந்தை குழந்தையை தொடர்ந்து தூக்கி வீசுவதுமாகவே இருந்தார்.

ஆனால் சில நிமிடங்களிலேயே குழந்தை நீருக்குள் மூழ்குகிறது, அந்த தந்தை குழந்தையை காப்பாற்ற கேட்டு குரல் எழுப்புவதாகவும் கமெராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நீச்சல் குளத்தில் இருந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

ஆனால் எடுத்துச் செல்லும் வழியிலேயே மூச்சு நின்றிருந்ததாகவும், குழந்தை இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதனையடுத்து அந்த தந்தையை கைது செய்த பொலிசார், அவர் மீது கொலைக்குற்றம் மற்றும் துரோகச்செயலுக்கான வழக்குகள் பதியப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

SHARE