மிகவும் ஆபத்தான பாறையின் முனையில் அசத்தலாக சாகசம் செய்யும் இளைஞர்

300
நோர்வேயில் உள்ள ஆபத்தான பாறையின் முனையில் இளைஞர் ஒருவர் சாகசம் செய்யும் புகைப்படங்கள் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதுபிரித்தானியாவின் சுரேவை (Surrey) சேர்ந்தவர் டொபி சிகர்(Toby Segar).பார்கூர் (Parkour) எனப்படும் சாகச கலையின் மீது நாட்டமுள்ள அவர் கடந்த 10 ஆண்டுகளாக சாலைகள் உயரமான கட்டிடங்கள் போன்றவற்றில் தனது சாகத்தை நிகழ்த்தியுள்ளார்.இந்நிலையில் நோர்வேயின் ரிங்கெடல்சவட்னெட் (Ringedalsvatnet) ஏரியின் மேலே 700 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள ட்ரோல்துங்கா பாறையின் முனையில் சாகசம் மேற்கொண்டு அனைவரையும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார்.மிகவும் ஆபத்தான இந்த பாறையில் சிறிது கால் தவறினாலும் உயிருக்கு ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டோபி கூறியதாவது, பாறையின் முனைக்கு சென்றபோது எதுவும் தவறாக நடக்காது என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன் அது எனக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.

அனைவரும் உயரத்தை பார்த்து பயப்படுகிறார்கள். அந்த பயம் நீங்க இந்த முயற்சி உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு இது போன்ற சாகசங்களில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

SHARE