உலக தடகளத்தில் ஆதிக்கம்: மீண்டும் தங்கம் வென்றார் உசைன் போல்ட் (வீடியோ இணைப்பு)

333
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், 200 மீற்றர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.சீன தலைநகர் பீஜிங்கில் 15வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன. நேற்று ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தின் இறுதிப்போட்டி நடந்தது.இதில் உலகின் ‘மின்னல் வேக மனிதன்’ ஜமைக்காவின் உசைன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் உள்ளிட்ட 9 பேர் பங்கேற்றனர்.

தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய போல்ட், பந்தய துாரத்தை 19.55 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இம்முறை 100 மீற்றர் ஓட்டத்தில் போல்ட்டுக்கு நெருக்கடி தந்த அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின், நேற்று பந்தய துாரத்தை 19.74 வினாடியில் கடந்து 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

வெண்கலப் பதக்கத்தை தென் ஆப்பிரிக்காவின் அனாசோ ஜோபாட்வானா (19.87 வினாடி) கைப்பற்றினார்.

இதில் வெற்றி பெற்றதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் 200 மீற்றர் ஓட்டத்தில் தொடர்ந்து 4வது முறையாக (2009, 2011, 2013, 2015) தங்கப் பதக்கம் வென்றார் உசைன் போல்ட்.

தவிர இது உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் போல்ட் வென்ற 10வது தங்கப் பதக்கம். இதுவரை இவர் 10 தங்கம், 2 வெள்ளி உட்பட மொத்தம் 12 பதக்கங்கள் வென்றுள்ளார்.

SHARE