கவுண்டிப் போட்டியில் மிரட்டல்: முதல் ஓவரின் முதல் பந்திலே சிக்சர் அடித்த மேக்ஸ்வெல்!

334
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் முதல் ஓவரின் முதல் பந்திலே சிக்சர் விளாசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.இந்த ஆண்டு யூன் மாதம் நடைபெற்ற நாட்வெஸ்ட் டி20 போட்டியில் யார்க்‌ஷேயர் மற்றும் லான்கேஷேயர் அணிகள் மோதின.

இதில் யார்க்‌ஷேயர் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல், முதல் ஓவரின் முதல் பந்திலே வித்தியாசமான ஷாட்டால் சிக்சர் விளாசிய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த இவர் வானவேடிக்கை காட்டியது நினைவிருக்கலாம்.

இருப்பினும் இந்தப் போட்டியில் இவர் 18 ஓட்டங்களே எடுத்தார். இவரது அணி 185 ஓட்டங்கள் எடுத்தது. ஆனால் லான்கேஷேயர் அணி 186 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

SHARE