Hero நிறுவனத்தின் Electric Scooter வாங்கினால் ரூ.27000 மதிப்பிலான சலுகைகள்.., என்ன மொடல்?

724

 

Hero மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா V1 ப்ரோ (Vida V1 Pro e-scooter) வாங்குவோருக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.

சலுகைகள்
ஹீரோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள அட்வான்டேஜ் பேக்கை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.

அதாவது Vida V1 Pro e-scooter -க்கு 27,000 ரூபாய் மதிப்பிலான சலுகையை ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே Vida V1 Pro e-scooter பயன்படுத்துவோர் எந்தவொரு கட்டணமும் இல்லாமல் ஏப்ரல் 30 -ம் திகதிக்குள் அட்வான்டேஜ் பேக்கை பெற முடியும்.

இந்த அட்வான்டேஜ் பேக் திட்டமானது, இரண்டு பேட்டரிகளுக்கும் ஐந்து ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி ஆகிய வசதிகளை வழங்குகிறது.

மேலும், 2 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜிங் பாயிண்ட்களை இலவசமாக பயன்படுத்தும் வசதி, Vida Workshop -களில் இலவச சர்வீஸ், 24×7 Roadside Assistance, MY Vida செயலியில் Connectivity, பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது.

இந்திய சந்தையில் Vida V1 Pro e-scooter விலை ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 200 (Ex-showroom) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கானது முழு சார்ஜில் அதிகபட்சம் 165 கிலோமீட்டர்கள் வரையிலான Range வழங்கும் என சான்று பெற்றுள்ளது. அதோடு மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனை கொண்டது.

SHARE