சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரொனால்டோ!

330
நேபாள நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு தனது கையெழுத்திட்ட ரியல் மாட்ரிட் ஜெர்சியை அனுப்பி ஆச்சரியப்படுத்தியுள்ளார் ரொனால்டோ.கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்கு பேரழிவு ஏற்பட்டது. பெரும்பாலான கிராமங்கள் அழிந்தன.

அங்கு கால்பந்து மீது தீரான ஆசைக் கொண்ட ஜெடின் என்ற 13 வயது சிறுவன் வசித்து வந்தான். நிலநடுக்கத்தால் ஊரே அழிந்த நிலையில் மக்கள் தெரு ஓரங்களில் வாழ்க்கை நடத்தினர்.

இந்த சூழ்நிலையில் கூட அழிந்து போன தெருவிற்கிடையே அந்த சிறுவன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தான்.

இதை பார்த்த புகைப்படக்காரர் ஒமர் ஹவானா, நிருபர் மகாரிடா மோடா ஆகியோர் இது குறித்து ரொனால்டோவின் ஏஜென்ட் ஜார்ஜ் மெண்டெசிடம் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் சிறுவனை பற்றி அறிந்த ரொனால்டோ, அந்த சிறுவனுக்கு தனது கைப்பட எழுதிய ரியல் மாட்ரிட் ஜெர்சியை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் “ஜெட்டின், நீ வலிமையாக இருக்க எனது வாழ்த்துக்கள்” என்று கூறி கையெழுத்திட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுவன் கூறுகையில், ரொனால்டோ தனக்கு ஜெர்சி வழங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும், ஒருநாள் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட விரும்புவதாகவும் கூறியுள்ளான்.

மற்றவர்கள் நலனின் மீது அக்கறை கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE