மகளை தோளில் சுமந்தபடி கொளுத்தும் வெயிலில் பேனா விற்கும் அகதி: குவியும் நிதியுதவி

302
லெபனான் நாட்டின் தெருக்களில் பேனா விற்று பிழைப்பு நடத்திவரும் அகதிக்கு நிதியுதவிகள் குவிந்து வண்ணம் உள்ளது.சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப்போரில் தனது மனைவியை பறிகாடுத்த நபர் ஒருவர் லெபனான் நாட்டின் டமாஸ்கசில் உள்ள யார்மோக் அகதிகள் முகாமில் தனது நான்கு வயது மற்றும் ஒன்பது வயது மகளுடன் வசித்து வருகிறார்.அகதிகள் முகாமில் மூன்று வேளை உணவு மட்டுமே உணவு கிடைப்பதால், தனது குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்கும் பொருட்களை வாங்கிக்கொடுக்க முடியவில்லை.இதனால், அகதிகள் முகாமுக்கு அருகில் உள்ள தெருக்களில் பேனாக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் குழந்தைகளுக்கு தேவையானவற்றை வாங்கிகொடுக்கிறார்.

இந்நிலையில், தூங்கிக்கொண்டிருக்கும் தனது மகளை தோளில் சுமந்தபடி, கொளுத்தும் வெயிலில் இந்நபர் பேனாக்கள் விற்றுவருவதை பார்த்த கிஸ்ஸூர் சைமனார்சன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பேனா வாங்குங்கள் என்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

இதனை பார்த்த நல்லுள்ளம் கொண்டவர்கள் அவருக்கு நிதியுதவி செய்துள்ளனர், டுவிட்டரில் பதிவிட்ட வெறும் 30 நிமிடங்களுக்கு 15 ஆயிரம் டொலர்கள் கிடைத்துள்ளன.

மேலும், அவருக்கு தொடர்ந்து நிதியுதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.

SHARE