வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச்சூடு: மன்னிப்பு கோரிய நபர்

316
முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் அத்தவறுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி கராச்சி நேஷனல் மைதானத்தில் இருந்து காரில் தன் வீட்டுக்கு வாசிம் அக்ரம் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இதையடுத்து வாசிம் அக்ரம் பொலிசில் புகார் செய்தார். அவருடைய கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் அமிருல் ரெஹ்மான் என்பது விசாரணையில் தெரிய வந்தது.இதன்பிறகு வாசிம் அக்ரமை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கிய ரெஹ்மான், இப்போது நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.தவறான புரிதல் காரணமாக துப்பாக்கி சுடுதல் சம்பவம் நடந்துவிட்டதாகக் கூறி அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது மிக மோசமான சம்பவம் ஆகும். நானும், எனது குடும்பத்தினரும் வாசிம் அக்ரமின் மிகப்பெரிய ரசிகர்கள். அவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக எனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து எனக்கு எதிர்ப்பு கிளம்பியது.

அக்ரம் பாகிஸ்தான் நாட்டின் ஹீரோ. இந்த நாட்டுக்கு பல்வேறு பெருமைகளை சேர்த்தவர் எனவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

SHARE