ஆஸ்திரேலியாவில் டாக்சி ஓட்டுநராக பணிபுரியும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்

306

சிட்னி: 1997-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான அர்ஷாத் கான் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். 2005-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 58 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர்,சிட்னி நகருக்கு குடி பெயர்ந்தார். அங்கு உபேர் டாக்சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த தற்போது டாக்சி ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் சிட்னியை சேர்ந்த இந்தியரான கணேஷ் பிர்லே என்பவர் நேற்று அர்ஷாத் கான் ஓட்டிய டாக்சியில் பயணித்துள்ளார். இது குறித்து கணேஷ் பிர்லே தனது ட்விட்டர் பதிவில் நான் கொண்டு வந்த பொருட்களை ஓட்டுநர் வாங்கி டாக்சியில் வைத்தார். அப்போதுதான் அர்ஷாத் கான், பாகிஸ்தான் அணிக்காக கிரிக்கெட் விளையாடியது குறித்து என்னிடம் கூறினார். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் இறங்கி செல்லும் போது அர்ஷாத் கானுக்கு நன்றி சொல்லி கை குலுக்கி விடை பெற்றேன் எனக் கூறியுள்ளார்.

SHARE