அதிர்ஷ்டமில்லாத இலங்கை கேப்டன்

320

இலங்கை கேப்டன் 28 வயதான மேத்யூஸ் சதம் அடித்தாலே அந்த அணிக்கு ராசி இருக்காது போலும். இந்த டெஸ்டில் அணியை காப்பாற்ற கடுமையாக போராடிய மேத்யூஸ் கடைசியில் 110 ரன்களில் வீழ்ந்தார். அவருக்கு இது 7-வது சதமாகும். 

மேத்யூசின் 6 சதங்களில் (3 தோல்வி, 3 டிரா) அந்த அணிக்கு வெற்றி கிடைத்ததில்லை. இதில் நடப்பு இந்திய தொடரில் எடுத்த 2 சதங்களும் (இரண்டிலும் தோல்வி) அடங்கும். 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 160 ரன்கள் குவித்த டெஸ்டில் மட்டும் அந்த அணி வெற்றி பெற்றிருந்தது.

SHARE