டோனியின் வெற்றி ரகசியத்தை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா

321
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் வெற்றி ரகசியம் தொடர்பாக சக வீரர் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்த வார நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா பங்கேற்கிறார். அப்போது அவரிடம் டோனி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.அதில் பேசிய சுரேஷ் ரெய்னா, “நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு உத்வேகமாக இருப்பவர் டோனி.

இந்திய அணியில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

உலகக்கிண்ணத் தொடரின் போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையை பார்க்க அவர் செல்லவில்லை.

இது தொடர்பாக நான் கேட்ட போது இந்தியாவுக்காக விளையாட வந்திருக்கிறோம். அது தான் முக்கியம் என்று தெரிவித்தார்.

நீங்கள் நெருக்கடியில் இருந்தால் அவரிடம் கொஞ்ச நேரம் பேசுங்கள். உங்கள் கவலைகள் பறந்து போகும். அவர் உங்களை அமைதிப்படுத்துவார்.

உங்கள் வாழ்க்கையில் இவர் போன்ற ஒரு உத்வேகம் அளிக்க கூடிய மனிதர் இருந்தால் உங்களுக்கு உத்வேகம் அளிக்க வேது எதுவும் வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

SHARE