அனுஷ்கா சர்மாவுக்கு முன் யார்? நடிகைகளுடன் சுற்றித் திரிந்த கோஹ்லி

350

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக கலக்கி வருகிறார் விராட் கோஹ்லி.

இவர் பாலிவுட் நடிகை அனுஷ்காவை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இவருக்கு முன்னதாக சிலருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார் கோஹ்லி.

ஒரு விளம்பத்தில் நடிக்கும் போது நடிகை ஜெனிலியாவுடன் தொடர் ஏற்பட்டதாகவும், இருவரும் தீவிரமாக காதலித்து வருவதாகவும் செய்திகள் பரவின. பின்னர் இந்த தகவல் பரவிய வேகத்தில் காணாமல் போனது.

பின்னர் கோஹ்லிக்கு ’மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற சாரா ஜென் டியாஸ் உடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சில மாதங்கள் ஒன்றாக சுற்றித் திரிந்தனர்.

உலகக்கிண்ண இறுதிப் போட்டியை பார்க்க கோஹ்லி அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவரால் வர இயலவில்லை. இதன் பிறகு இவர்களுக்குள் நெருக்கம் குறைந்தது.

இவரைத் தொடர்ந்து நடிகை இசாபெல்லி உடன் தொடர்பில் இருந்த விராட் கோஹ்லி அவருடன் 2 வருடம் பல இடங்களுக்கு சுற்றுத் திரிந்தார்.

இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் பரவின. ஆனால் இதுவும் நீண்ட காலம் நிலைக்கவில்லை.

இதன் பிறகு தான் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் பாலிவுட் நடிகை அனுகா சர்மாவை சந்தித்திருக்கிறார் கோஹ்லி. முதலில் நட்புடன் தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

ஆரம்பத்தில் தங்களது காதல் தொடர்பாக  இருவரும் வாயை திறக்க மறுத்திருந்தாலும், பின்னர் வெளிப்படையாக அறிவித்தனர். தற்போது பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று வருகின்றனர்.

உலகக்கிண்ணப் போட்டியில் கோஹ்லிக்கு ஆதரவு அளிக்க அனுஷ்கா கூட அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.

கோஹ்லி சதம் அடித்து விட்டு அனுஷ்காவுக்கு கொடுத்த முத்தம் அவரை சென்றதோ இல்லையோ, இங்கிலாந்து வீராங்கனை டேனியல் யாட்டையும் கவர்ந்து விட்டது.

அவரும் தன் பங்கிற்கு டுவிட்டரில் கோஹ்லியிடம் காதலை வெளிப்படுத்தியது நினைவிருக்கலாம்.

SHARE