வங்கதேச ‘ஏ’ அணியுடன் மோதல்: இந்திய ‘ஏ’ அணியில் டோனி, கோஹ்லி

314
வங்கதேச ‘ஏ’ அணிக்கு ஏதிரான இந்திய ‘ஏ’ அணியில் டோனி, கோஹ்லி, ரெய்னா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் வங்கதேசம் ‘ஏ’ அணி, மூன்று ஒருநாள் மற்றும் ஒரே ஒரு மூன்று நாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும், ஒருநாள் போட்டி தலைவர் டோனி இதில் விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தவிர, ரெய்னா, அம்பதி ராயுடு, கோஹ்லி உள்ளிட்ட சில சீனியர் வீரர்கள் இந்திய ‘ஏ’ அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் செல்லும் தென் ஆப்பிரிக்க அணி 3 சர்வதேச ‘டி20’, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் தொடர்களில் விளையாடுகிறது.

இத்தொடருக்கு பயிற்சியாக சில சீனியர் வீரர்கள் வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிராக விளையாட உள்ளனர். இப்போட்டிகள் அனைத்தும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ளது.

SHARE