கோஹ்லியால் அணித்தலைவர் பதவியை நிரந்தரமாக இழக்கும் டோனி?

321
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கும் விராட் கோஹ்லியை இந்திய அணியின் தலைவராக நியமிக்க கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது டெஸ்ட் போட்டிகளின் தலைவராக விராட் கோஹ்லி செயல்பட்டார்.

இதனையடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி இவரது தலைமையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதில் இந்திய ஒருநாள் போட்டிக்கும் கோஹ்லியை தலைவராக நியமிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதே சமயம் டோனியை டி20 போட்டிகளுக்கு மட்டும் தலைவராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் டோனியின் கருத்தையும் கேட்டு அதற்கு பின்னரே முடிவெடுக்க வேண்டுமென்பதில் இந்திய தேர்வுக்குழுவினர் தெளிவாக உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி வரும் 15ம் திகதி தெரிவு செய்யப்படுகிறது.

SHARE