சவுதி அதிகாரி வீட்டில் செக்ஸ் அடிமைகளாக இருந்தோம்: தாய்-மகள் பகீர் வாக்குமூலம் !

435

ஒரு நாளில் அதிகபட்சம் 8 பேருடன் கூட உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்.. இத்தோடு நாங்கள் இறந்தே விடுவோம் என்று தான் நினைத்திருந்தோம்” என்று டெல்லியில் பணியாற்றும் சவுதி அரேபிய நாட்டு தூதரக அதிகாரி வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வேலைக்கார பெண்மணியும், அவரது மகளும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவின் தூதரகம் இந்திய தலைநகர் டெல்லியிலுள்ளது. இதில் பணியிலுள்ளார் செயலாளர் என்ற மட்டத்திலான ஒரு ‘உயர் அதிகாரி’. இந்த அதிகாரியின் வீடு குர்கான் பகுதியிலுள்ளது.

musilim-girl

இந்த வீட்டில் வேலை செய்வதற்காக என்று, 4 மாதங்கள் முன்பு நேபாளத்தை சேர்ந்த 44 வயது பெண் மற்றும் அவரது 20 வயது மகள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், பணிக்கு அமர்த்திய சில நாட்களிலேயே வேலைக்கு வந்த தாயையும், மகளையும், அந்த அதிகாரி செக்ஸ் அடிமைகளாக நடத்தியுள்ளார். சவுதியில் இருந்து டெல்லி வரும் அவரது நண்பர்கள் பலருக்கும் அந்த இரு பெண்களையும் விருந்தாக்கியுள்ளார். என்.ஜி.ஓ தகவல் அடிப்படையில் டெல்லி போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தி இரு பெண்களையும் மீட்டுள்ளனர். சவுதி அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தூதரக மட்டத்திலான உறவு கெடும் என்பதால், குற்றவாளிகள் பெயர் விவரத்தை வெளியிட போலீசார் மறுத்து வருகிறார்கள்

மீட்கப்பட்டபெண்கள் போலீசாரிடம் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: கடந்த 4 மாதங்கள் நாங்கள் வாழ்க்கையில் சபிக்கப்பட்ட தருணத்தில் வாழ்ந்தோம். எங்களை வேலைக்கு அமர்த்திய சவுதி அதிகாரி, அடுத்த சில நாட்களில் எங்கள் இருவரையும் சவுதிக்கு அழைத்துச் சென்றார். சுமார் இரு வாரங்கள் அங்கு இருந்தோம். அப்போது அவர் நடவடிக்கையில் எந்த சந்தேகமும் எங்களுக்கு எழவில்லை. பிறகு மீண்டும் டெல்லி திரும்பிய பிறகுதான், அதிகாரியின் கொடூர முகம் தெரியவந்தது. டெல்லிக்கு வந்த மறுநாளே, எங்கள் இருவரையும் கூப்பிட்டு தனது உடலுக்கு மசாஜ் செய்துவிடச் சொன்னார். நாங்களும் தயங்கியபடியே செய்ய தொடங்கியபோது, அப்படியே பிடித்து இழுத்து மாறி மாறி எங்களை பலாத்காரம் செய்தார்.

ஒருநாளும் எங்கள் இருவரையுமே சும்மா இருக்கவிட்டதில்லை. அதிகாரியோ, அல்லது சவுதியில் இருந்து வரும் அவரது நண்பர்களோ எங்களை பலாத்காரம் செய்துகொண்டேதான் இருந்தனர். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 8 ஆண்கள் வரை எங்களை பலாத்காரம் செய்துள்ளனர். எங்களுக்கு நல்ல சாப்பாடு கொடுத்ததில்லை, நீரை அதிகம் கலந்து டீ கொடுப்பார்கள். ஆனால் அதிகாரியோ அவரது நண்பர்களோ எங்களை பலாத்காரம் செய்யவரும் முன்பாக நன்கு குளிக்க செய்வார்கள். வாசனை திரவியங்களை பூசச் செய்து, கவர்ச்சி உடையை உடுக்க வைத்து, மாறி மாறி பலாத்காரம் செய்வார்கள்.

பெரும்பாலும், பலாத்காரம் வாய்வழி புணர்ச்சியாகவோ அல்லது இயற்கைக்கு முரணான வழிகளிலோ இருக்கும். வலி, வேதனையால் நாங்கள் துடிப்பதை ரசித்து சிரித்தபடி பலாத்காரம் செய்வார்கள். ஒரு அடிமைகளை போல எங்களை நடத்தினர். கணவரும் அவரது நண்பர்களும் எங்களை விடியவிடிய பலாத்காரம் செய்வது அதே வீட்டில் உள்ள சவுதி அதிகாரி மனைவிக்கும், மகளுக்கும் தெரியும். இருந்தாலும், பலாத்காரத்தை தடுத்ததில்லை. மாறாக, அதிகாரிக்கும், அவரது நண்பர்களுக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்குமாறு, அவரது மனைவி வற்புறுத்துவார். பலாத்காரம் செய்ய யாரும் வராத நேரங்களில் அதிகாரியின் மனைவி, எங்கள் இருவரையும் வீட்டு வேலைகளை செய்ய வைத்து தொடர்ந்து துன்புறுத்துவார். நண்பர்கள் வந்தால், குளிக்க வைத்து படுக்கையறைக்கு அனுப்பி வைப்பார்.

ஆக்ரா, நைனிட்டால் போன்ற நகரங்களுக்கு அதிகாரி குடும்பத்தோடு செல்லும்போது, எங்கள் இருவரையும் அழைத்துச் செல்வார். அந்த நகரங்களிலும் பலருக்கு நாங்கள் விருந்தாக்கப்பட்டுள்ளோம். குர்கானில் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது. பெரும்பாலும், கத்திமுனையில்தான் வைக்கப்பட்டிருப்போம். தொடர்ந்து மாறி மாறி பலாத்காரம் செய்யப்பட்டு வந்ததாலும், தகாத முறைகளில் எங்களை அவர்கள் பலாத்காரம் செய்ததாலும், நாங்கள் இறந்துவிடுவோம் என்று பயந்திருந்தோம். எங்கள் உடலை கூட உறவினர்கள் பார்க்க முடியாதோ என்று அஞ்சினோம். எப்படியோ 4 மாத நரகத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளோம். இவ்வாறு அந்த தாயும், மகளும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

SHARE