இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஹாட்ரிக் அரைசதம் அடித்து சாதனை

328

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளன. நாளை ஐந்து மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் அபாரமாக விளையாடி வருகிறார். இவர் முதல் போட்டியில் 38 ரன்கள் எடுத்தார். அதன்பின் 85, 62, 92 முறையே கடைசி மூன்று போட்டிகளில் ரன் குவித்துள்ளார்.

இதன் மூலம் ஹாட்ரிட் அரைசதம் அடித்த பெருமையை மோர்கன் பெற்றுள்ளார். உலக அளவில் ஹாட்ரிட் அடித்த 28-வது நபர் இவராவார். இங்கிலாந்து- ஆஸ்திரேலியா தொடரில் முதல் நபராக இருக்கிறார்

SHARE