ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம். நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது

341

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் நவம்பர் மாதம் 5-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடருக்கு ஒய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் மெக்கல்லம் உள்பட பலர் அணியில் இணைந்துள்ளனர்.

காயம் காரணமாக விளையாடாமல் இருந்து ராஸ் டெய்லர், டிரென்ட் போல்ட் மற்றும் கோரி ஆண்டர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண்டர்சன், நீஷம் என இரண்டு ஆல்ரவுண்டர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து கடந்த 7 டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்: பிராண்டன் மெக்கல்லம் (கேப்டன்), கோரி ஆண்டர்சன், டிரென்ட் போல்ட், பிரேஸ்வெல், மார்க் கிரேக், மார்ட்டின் குப்தில், மேட் ஹென்றி, டோம் லாதம், ஜேம்ஸ் நீஷம், லூக் ரோஞ்சி, ருதர்போர்டு, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், வாட்லிங், கேன் வில்லியம்சன்.

SHARE