மெஸ்சி-அன்டோனெல்லா ஜோடிக்கு 2-வது ஆண் குழந்தை பிறந்தது

343
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்சி கிளப் போட்டிகளில் மன்னனாக விளங்கி வருகிறார். அவர் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணியின் முன்னணி வீரராகவும் இருந்து வருகிறார்.

மெஸ்சி திருமணம் முடிக்காமல் தனது நீண்ட கால காதலியான அன்டோனெல்லா ரெக்குஸ்ஸோ என்பவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தியாகோ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் அன்டோனெல்லாவுக்கு தற்போது 2-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மேடியோ என்று பெயர் வைத்துள்ளனர்.

குழந்தை பிறந்ததை உறுதி செய்துள்ள மெஸ்சியின் சகோதரர், ‘‘மேடியோ இப்போதுதான் பிறந்துள்ளான். அவன் அழகாக உள்ளான்’’ என்று அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

SHARE