விளையாட விரும்புகிறேன்: வீராட் கோலிக்கு சச்சின் டுவிட் – ரசிகர்கள் குழப்பம்

321

‘விளையாட விரும்புகிறேன்’ என்று வீராட் கோலிக்கு சச்சின் அனுப்பிய டுவிட்டால் அவரது ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

மேற்கூறிய சச்சினின் டுவிட்டுக்கு வீராட் கோலி ’உங்களுக்கு அந்த திறன் இருப்பதாக என்னால் உறுதியாக கூற முடியவில்லை’ என்று பொருள்படும் படி பதில் அளித்துள்ளார்.  சச்சின் – கோலிக்கு இடையே நடைபெற்ற இந்த டுவிட் பறிமாற்றத்தால் ரசிகர்கள் குழம்பிபோய்யுள்ளனர்.

சமீபத்தில் ஒரு டென்னிஸ் அணியை வாங்கியுள்ளார் கோலி. அந்த அணியில் உலக புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் இடம் பெற்றுள்ளார். சச்சினும் ரோஜர் பெடரரும் நண்பர்கள் என்பதால், அவருடன் இணைந்து சச்சின் விளையாட விரும்புகிறார். அது தொடர்பாகவே அந்த டுவிட் பறிமாற்றம் நடைபெற்றுள்ளது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

SHARE