எகிப்தின் வடக்கு சினாயில் சண்டை: 2 ராணுவ வீரர்கள் மற்றும் 66 தீவிரவாதிகள் பலி

312

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல்களில் 64 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான பரந்த அளவிலான தாக்குதலை ராணுவம் கடந்த திங்கள் அன்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் சினாய் தீபகற்பத்தின் பல்வேறு நகரங்களின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 64 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று நடந்த சண்டையில் 2  ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முகமது முர்சியை 2013–ம் ஆண்டு ராணுவம் பதவியில் இருந்து நீக்கியது. அதன்பின்னர் தற்போது அப்தெல்பதே அல்–சிசி அதிபராக பதவி வகிக்கிறார். முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டபின் சினாய் தீபகற்ப பகுதியில் அவருக்கு ஆதரவான தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அவர்கள் இதுவரை நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை கொன்று குவித்துள்ளனர்.

SHARE