“லண்டன், நியூயார்க், கொல்கத்தா நகரங்கள் தண்ணீரில் மூழ்கும்” விஞ்ஞானிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

328

தொழிற்சாலை பெருக்கத்தால், கார்பன்-டை-ஆக்சைடு வாயு வெளியாவது அதிகரித்து வருகிறது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிப்பதன் மூலமும் அவ்வாயு அதிக அளவில் வெளியாகி வருகிறது. இப்படி எரித்துக் கொண்டே போனால், அது பருவநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதன்மூலம், அண்டார்டிக் பனிப்பாறைகள் முழுமையாக உருகி, கடல் நீர் மட்டம் பல மீட்டர் உயரும். அதனால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், உலகின் முக்கிய பெரு நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று பிரபல பருவநிலை விஞ்ஞானி ஜேம்ஸ் ஹன்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

குறிப்பாக, லண்டன், நியூயார்க், ஷாங்காய், டோக்கியோ, ஹாங்காங், ஹம்பர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று அந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த பட்டியலில், இந்தியாவில் உள்ள கொல்கத்தா நகரமும் உள்ளது. இந்த நகரங்கள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 100 கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

எனவே, அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால், எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிப்பதை குறைக்க வேண்டும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
uk

SHARE