சம்மந்தனின் எதிர்கட்சி பதவியே ஜ.நா வில் மங்களவிற்கு கிடைத்த வெற்றி

343
சர்வதேச அமைப்புக்களின் உதவியுடன் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும்: மங்கள
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னின்று செயற்படுமென இதன்போது சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம், தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென இதன்போது தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் இனம், மொழி பேதமின்றி பாகுபாடின்றி செயற்படுவதை, எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டமை மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசராக தமிழரான ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளமை ஆகியவை எடுத்துக்காட்டாகுமென அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை படையினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தாலும், அது ஒரு சிலர் செய்த தவறென்றும், இனிமேல் அவ்வாறு நடைபெற மாட்டாது என்ற வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், சர்வதேச அமைப்புக்களின் உதவியுடன், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மங்கள உறுதியளித்துள்ளார்.

SHARE