ராணுவ வீரர்கள் கிரிக்கெட்: டோனி நிறுவனத்துக்கு ரூ. 20 லட்சம்

333

இங்கிலாந்தில் கடந்த வாரம் 17ம் திகதி ராணுவ வீரர்களுக்கான நிதி திரட்டும் காட்சி டி20 போட்டி நடைபெற்றது.

இதில் ஹெல்ப் ஃபார் ஹீரோஸ்- உலக லெவன் (Help for Heroes XI- Rest of the World XI) ஆகிய இரு அணிகள் மோதின.

இதில் ஹீரோஸ் அணியில் விளையாடிய இந்திய அணித்தலைவர் டோனி 38 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்தப் போட்டி மூலம் திரட்டப்பட்ட ரூ. 3 கோடியில் டோனியின் தொண்டு நிறுவனத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தொகை இந்திய ராணுவ வீரர்களுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற போட்டி அடுத்தவருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது.

SHARE