சிறைச்சாலைகளுக்குள் கையடக்கத்தொலைபேசிகள் எவ்வாறு நகர்த்தப்படுகிறது?

757

பிரித்தானியகால ஆட்சியின் போது கட்டப்பட்டதுதான் வெலிக்கடை சிறைச்சாலையாகும். 1841 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் வெலிக்கடையில் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட சப்பல் என்றழைக்கப்படும் கட்டடப்பகுதி காணப்படுகிறது. இதன் அமைப்பு எவ்வாறெனின் சிலுவை வடிவம் கொண்டதாகும். நான்கு திசைகளிலும் இருந்து கைதிகளை கண்கானிக்கும் கட்டடமாக பிரித்தானிய அரசினால் கட்டப்பட்ட சிறைக்கூடம் அமைகிறது.

இக்கட்டடமானது 03 மாடிக ளைக் கொண்டது. இதில் யுஇடீஇஊஇனு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டடத்தின் அடிப்பகுதியில் ஆயுள் கைதிகள் 400 பேர் வரையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனுள் மரணதண்டனைக் கைதி களும் அடங்குவர். இவற்றை விடவும் முறையே 200,150,100,75,50,25,10,05,01 வருடங்கள் என்ற வரிசைப்படி குற்றம் புரிந்த கைதிகளுக்கான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. 1994ம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பில் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட நவரெட்ணம் ஐயாவும் 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அங்கே தான் தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்த குண்டுவெடிப்பின் போது பிரபாகரன், பொட்டுஅம்மான், நவரெட்ணம் ஆகிய மூவருக்கும் முறையே ஆளுக்கு 200 வருடகாலங்கள் என்ற அடிப்படையில் மொத்தமாக 600 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இதில் சிக்கிக்கொண்டவர் நவரெட்ணம் ஐயா மட்டுமே. 2009ம் ஆண்டு வன்னிப்பகுதியிலிருந்து புனர்வாழ்வு முகாமுக்கு வந்தபொழுது, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு 04ம் மாடி யில் வைக்கப்பட்டு விசா ரணை முடிவுற்றபின் வெலிக்கடை சிறைச்சாலைக்கு தண்டனைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கிருந்து போஹம்பர, மஹர போன்ற சிறைச்சாலைகளிலும் இவர் வைக்கப்பட்டார். இவரிடம் கூடவும் கையடக்கத்தொலைபேசி இருந்துதான் இருக்கின்றது. இதை யார் உள்ளே கொண்டுவந்து வழங்கினார்கள் என்று பார்ப்பதற்கு முன் ஏனைய சிறைச்சாலைகளும், அதன் பாதுகாப்புகள் பற்றியும் பார்ப்பது சிறந்ததாகும்.

போஹம்பர சிறைச்சாலை தற்பொழுது இடம்மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த சிறைச்சாலையினுள் ஒரு பொருளை கொண்டுசெல்ல முடியாதளவிற்கு பாதுகாப்புக்கள் பலப் படுத்தப்பட்டிருந்தது. சிறைச்சாலைக்கு ஒரு கைதி செல்லும்பொழுது ஆடைகள் களையப்பட்டு விரல் நகங்கள், பற்கள், தலைமுடிகள், காற்பாதம், மலவாசல் கூட முழுமையாக பரிசோதிக்கப்படும். அதன் பின்னரே ஒரு கைதி உட்செல்ல அனுமதிக்கப்படுவார்.

மட்டுமன்றி அவருடைய பாவணைப்பொருட்கள் அனைத்தும் சிறைப்பாதுகாப்பினரால் முற்றுமுழுதாக பரிசோதிக்கப்படும்;. இவ்வாறானதொரு நடைமுறைதான் போஹம்பரை சிறைச்சாலையில் இருந்து வந்தது. இதேபோன்று மஹர சிறைச்சாலையை எடுத்துக்கொண்டால், அங்கு கொண்டு செல்லப்படும் சிறைக்கைதிகள் சிறைச்சாலைக்குள்ளேயே குற்றங்க ளைப் புரிந்தவர்கள், காவலாளர்களுக்கு அடங்காதவர்கள், ஏனைய கைதி களுடன் தவறான முறை யில் நடந்துகொண்டவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் அச் சிறைச்சாலைக்குள்ளேயே போதைப் பொருட்களை பயன்படுத்தியவர்கள் மஹர சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கான விசேட கண்கானிப்பும் அங்கு உள்ளது.

இவர்களும் அச்சிறைச்சாலையினுள் செல்கின்றபொழுது, நிர்வாண மாக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவார்கள். மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்படுபவர்கள் விசேட தண்டனைக்குரியவர்களாக கருதப் படுவார்கள். இதேபோன்று வீரவல சிறைச்சாலையை எடுத்துக்கொண்டால் இங்கும் கைதிகளுக்குள்ளேயே முரண்பாடுடையவர்கள், தொலை பேசி பயன்படுத்தியவர்கள் அங்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் தோட்ட வேலைகளுக்கு அமர்த்தப்படுவார்கள். அதிகூடிய சித்திரவதைகளும் செய்யப்படுகின்றன.
ஒரு அடி கைப்பிடி அள வுடைய மண்வெட்டியினால் தோட்ட வேலைகள் செய்யவேண்டும். அங்கிருந்து தப்பிசென்றால் துன்புறுத்தலுக்குள்ளாவார்கள். அங்கு கேட்பதற்கு யாரும் இல்லை. அங்கே போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் அவர்களை கூடுதல் சித்திரவதை செய்யும் அதிகாரம் அக்காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கும் கூட கையடக்கத்தொலைபேசி பாவனை இருக்கின்றது. இது எவ்வாறு என்று பார்ப்பதற்கு முன் அடுத்து நீர்கொழும்புச் சிறைச்சாலை பற்றிப் பார்ப்போம்.

இங்கேதான் அதிகூடிய கையடக்கத்தொலைபேசிகள் பாவனை யிலுள்ளது. இங்கே கைதுசெய்யப்பட்டு அழைத்து வருபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், வீசா, கடவுச்சீட்டுக்கள், போதைப்பொருட்கள் கடத்தல், போலி நாணயத்தாள்கள், கப்பம் பெற்றவர்கள் போன்றோர் இங்கே அதிகமாகக் காணப்படுவார்கள். இங்கே ஆவார்ட், யுவார்ட், டீஇஊஇனுஇநு வார்ட் போன்றவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவார்ட் ஆனது மாபில்கள் பதிக்கப்பட்டு மின்விசிறிகள் போன்ற வசதிகளைக் கொண்டது. ஒருவர் இந்த இடத்திற்கு வருவதாக இருந்தால் சிறைச்சாலை அதிகாரிக்கு 25000 ரூபாய்கள் கப்பமாக வழங்கவேண்டும். உயரதிகா ரிகள் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். அதற்கென கைதி களை வைத்துள்ளார்கள். கலு,பண்டார,முஹமட் போன்றோர் சிறைச்சாலை அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள். இவர்கள் அங்கு 10,15 வருடங்களாக இருக்கின்றார்கள்.

இவர்கள்தான் ஏனையவர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்க அங்கிருக்கும் காவலாளிகளுக்கு பணத்தை கப்பமாகக் கொடுத்து வரவழைப்பவர்கள். ஊவார்ட்டினைப் பொறுத்தவரையில் உறங்குவதற்கு 5000 ரூபாய் வழங்கவேண்டும். இல்லாது போனால் கால்களுக்கு விறகு அடுக்குவது போன்று தான் உறங்கவேண்டும். பணம் செலுத்தினால் கால்பிடிப்பதற்கும், கையைப்பிடிப்பதற்கும் ஒருவர் உண்டு.

ஆண்களை பெண்களாக பயன்படுத்தி தமது இச்சைகளைத் தீர்த்துக்கொள்பவர்களும் அங்கு இருக்கின்றார்கள். இங்கே குறைந்தது 1500 கைதிகளை வைத்திருக்கமுடியும். இதில் அதிகமாக சுற்றுலாப்பயணிகள் இச்சிறைச்சாலையில் கைதி களாக இருக்கின்றார்கள். காவலாளிகளுக்கு முன்பாகவே கையடக்கத்தொலைபேசியை பயன் படுத்துவார்கள். இதற்கு காவலாளிக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. ளுiஅ ஒன்றினைக் கொண்டுவருவதற்கு 1000ரூபாய் வழங்கப்படுகிறது. சிக ரட், கஞ்சா, புகையிலை, பீடீ போன்ற போதைப்பொருட்களை கொண்டுவருவதற்கு 1000 இற்கு 200 ரூபாய் கொமிஷனாக வழங்கினால் காவலாளி உள்ளே கொண்டுவருவார். அதனைவிட 10000 ரூபாய் 20000 ரூபாய் பணத்தை உள்ளே கொண்டுவந்து வழங்க 1000இற்கு 300 ரூபாய் ஒரு காவலாளிக்கு வழங்கவேண்டும். எல்லாக் காவலா ளிகளும் அல்ல. குறிப்பிட்ட ஒரு சிலர் இருக்கின்றார்கள். இவர்கள் மூலமாகவே இச்செயற்பாடுகள் இடம்பெறுகிறது.

இவற்றைக் கண்டிக்காது கைதி களை தாக்குவதும், அவர்களுக்கு தண்டனைகளை வழங்குவதிலுமே அரசாங்கம் தீவிரம் காட்டிவருகின்றது. வெலிக்கடை சிறைச்சாலையை பொறுத்தவரையில் ஒரு நாளைக்கான ஹெரோயின் மட்டும் 1500 கைதிகளுக்கு மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். போதைப்பொருட்களை பயன்படுத்தா விட்டால் அவர்களால் அங்கு இருக்கமுடியாது. இப்பொருட்கள் அனைத்தும் அங்கு பணியாற்றும் காவலாளர்களாலேயே கொண்டு வரப்படுகின்றது. வெலிக்கடை சிறைச்சாலையை பொறுத்தவரையில் இதுதொடர்பாக காவலாளர்கள் கைதுசெய்யப்பட்டும் இருக்கின்றனர். இச்சிறைச்சாலையினுள் கோழி, அரிசி, சீனி, தேயிலை போன்ற பொருட்களை ஒரு சில அதிகாரிகள் வீடு கொண்டு செல்கின்றனர்.

வெலிக்கடை சிறைச்சாலையை பொறுத்தவரையில் பள்ளி, கோயில், விகாரை, வு வார்ட் என்றவாறு காணப்படுகிறது. இந்த இடங்களுக்கு வரும் கைதிகள் குறைந்தது 2000 – 4000 வரை செலுத்தியிருக்கவேண்டும். குறைந்த பட்சம் 15000 வரை செலுத்தியே இந்த இடங்களுக்கு வருகின்றார்கள். கப்பம் வாங்கும் அதிகாரிகள் இன்னும் கடமையாற்றுகின்றார்கள். இவர்களின் பெயர்களை குறிப்பிடுவது அவர்களின் பணிக்கு அவதூறாகும் என்ற வகையில் ;பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சில்வா மாத்தையா, கலுவாராய்ச்சி மாத்தையா, நளிம் மாத்தையா போன்றோர் கப்பம் வாங்காதவர்கள் போல் ஏனையவர்களை தடிகளால் தாக்குவார்கள். ஆனால் இவர்களும் மறைமுகமாக கப்பம் கோருவதாக அங்கிருக்கும் கைதிகள் தெரிவித்தாலும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. ஆனால் இது தொடர்பில் கைதிகள், குற்றம் புரிவோரினால் அநீதிகள் இழைக்கப்படும் போது குரல்கொடுப்பார்கள்.

நளிம், கலுவாராய்ச்சி மாத்தையா போன்றோர் சிறைச்சாலையை சுற்றிவருகின்றார்கள் என்று அறிந்தால் கைதிகள் அமைதியாகிவிடுவார்கள். இற்றைக்கு 02 வருடங்களுக்கு முன் 48 பொலிஸ் அதிகாரிகள் வெலிக்கடைச்சிறையில் கைதி களை சோதனையிடசென்ற நேரம் கைதிகளால் தாக்குதலுக்குள்ளாகி வெளியேற்றப்பட்டார்கள். இச்சம்பவத்தை யாவரும் அறிந்ததே. எத்தனையோ ஊழல்கள் இந்தச் சிறையினுள் நடக்கின்றது. சிறைச்சாலை ஒரு மனி தனை நல்வழிப்படுத்துவதற்குப் பதிலாக மீண்டும் ஒரு குற்றத்தினை புரிவதற்கான வழியாக அமைகின்றது. இன்று சுபசாதிக என்ற ஒரு நலன்புரிச் சங்கம் இருக்கின்றது. இந்த நலன்புரிச்சங்கத்தோடு நட்புறவாக இருக்கும் கைதிகள் நன்நடத்தை என்ற பெயரில் குறைந்த சிறைத் தண்டனைக்காலங்களோடு விடுதலைசெய்யப்படுவார்கள்.

இங்கு ஒட்டுமொத்தமாக தற்பொழுது 5000 கைதிகளுக்கு மேல் இருக்கின்றார்கள். இச்சிறைச் சாலையினுள் 15000 இற்கு மேற்பட்ட கைதிகளை தடுத்துவைக்கமுடியும். கைதிகளுக்குள்ளேயே கப்பம் பெறுபவர்களும் இருக்கின்றார்கள். புதிதாக ஒருவர் சென்றால் உடனே அவர்களிடம் கப்பம் பெறுபவர்களும் இருக்கின்றார்கள்.

இவ்வாறு எதற்காகவிருந்தாலும் அங்கு கப்பம் பெறும் செயற்பாடுகள் காணப்படுகிறது. 01 தட்டு உணவு வழங்கப்படும். 02 தட்டு உணவு வேண்டுமாகவிருந்தால் லோக்கல் என்றழைக்கப்படும் கடதாசியால் சுற்றப்பட்ட புகையிலை வழங்கவேண்டும். இப்படிப்பட்ட சூழல் இச்சிறையில் காணப்படுவதால் எவ்வாறு சிறை யில் உள்ள கைதிகளை திருத்துவது. கையடக்கத்தொலைபேசிகளை உட் கொண்டுசெல்வது சிறைச்சாலை காவலாளிகள்தான். இவர்களை தவிர வேறு ஒருவரும் கொண்டுசெல்ல முடியாது. கிழமைகளில் ஒரு நாளைக்காவது உறவினர்களோடு உரையாட காவலாளிகள் ஏற்பாடு செய்துகொடுக்கவேண்டும் வெளிநா டுகளில் காணப்படுவதைப்போல். அதனைவிடுத்து இலங்கையரசாங்கம் சிறைச்சாலைகளில் கைதிகளிடமிருந்த கையடக்கத்தொலைபேசிகள், வேறு சில உபகரணங்களை எடுத்துள்ளோம் என்பது வியக்கத்தக்கவிடயமல்ல. ஒவ்வொரு கைதியும் உள்ளே வருவதற்கு முன் இலத்திரனியல் மூலம் அவர்களை பரிசோதித்து உள் அழைப்பது நல்லது. சிறைச்சாலைகள் எங்கிலும் புகைப்படக்கருவிகளை பயன்படுத்;;துவது சிறந்தது. இதனை விடுத்து கைதி களைத் தாக்குவது என்பது கீழ்த்தனமாக செயற்பாடாகும்.

முதலாவது சிறைச்சாலையினுள் நடக்கின்ற ஊழல்களை ஒழியுங்கள். பின்னர் அனைத்துச் செயற்பாடுகளும் ஒழுங்காக நடைபெறும். இன்று காணப்படும் சிறைச்சாலைகளில் மேற்குறிப்பிடப்பட்ட சிறைச்சாலைகள் மிக முக்கியமானவையாகும். இங்கேயே ஏராளமான கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். சிறைச்சாலைகள் என்பது குற்றங்கள் புரிந்தவர்களை சீர்திருத்தும் கல்விக்கூடமாகும். காவலதிகா ரிகள் கப்பம் பெறுவதனை நிறுத்தி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அடிப்படையில் செயற்பட்டால் தொலைபேசி பாவணைகளை நிறுத்தமுடியும். இல்லையெனில் கைதி கள் பிழைகளைச் செய்வதற்கு சிறைச்சாலை காவலாளிகளும் உயரதி காரிகளுமே அடிப்படைக்காரணம் என்று கூறவேண்டும்.

இதனைவிடவும் கைதிகள் எவ்வாறு சிறைக்கைதிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்கின்ற விபரங்கள் இருக்கின்றன. ஆகவே சிறை உயரதிகாரிகள் கைதிகளின் நலனில் அக்கறைகொண்டு செயற்படவேண்டும். அவ்வாறெனில் சிறந்ததொரு தவறுகள் இழைக்காத சமுதாயத்தை உருவாக்கமுடியும்.

– நெற்றிப்பொறியன் –

 

SHARE