தென் ஆப்பிரிக்க தொடர்: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி

337
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரைத் தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்திய அணியுடன் 3 ‘டி20’, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 72 நாட்கள் கொண்ட நீண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்நிலையில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க, வித்தியாசமான பயிற்சியில் (2 நாட்கள்) இந்திய வீரர்கள் ஈடுபட உள்ளனர். முன்னதாக பெங்களுரில் நடந்த பயிற்சி முகாமில் இந்திய வீரர்கள் பங்கேற்றனர்.

தற்போது இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் இந்திய வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி இன்று அங்கு செல்கிறது. முதல் ‘டி20’ அக்டோபர் 2ம் திகதி தரம்சாலாவில் நடக்கவுள்ளது.

அங்கு இந்திய வீரர்கள் மலையேறுதல், ஓடுதல் உள்ளிட்ட பல கடினமான பயிற்சிகளை செய்ய உள்ளனர். இதன் மூலம், வீரர்கள் உடல் வலிமை பெறுவதுடன், மனதளவிலும் எவ்வித நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியும்.

ராணுவ வீரர்களுக்கு தரப்படும் இப்பயிற்சி, இந்திய அணியினருக்கும் அளிக்கப்பட வேண்டும் என இயக்குனர் ரவி சாஸ்திரி விரும்பியுள்ளார்.

இதை ஏற்றுக் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரிய செயலர் தாகூர் இதற்கான ஏற்பாடுகளை தொடங்க அனுமதி வழங்கியதாக இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

SHARE