யங்கரவாத அச்சுறுத்தல் – வங்கதேசம் செல்ல ஆஸ்திரேலிய அணி தயங்குகிறது.

340

யங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக வங்கதேசம் செல்ல ஆஸ்திரேலிய அணி தயங்குகிறது.

வங்கதேசம் செல்லும் ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் அக்., 9ல் சிட்டகாங்கில் துவங்குகிறது.

இதற்கான ஆஸ்திரேலிய அணியினர் 27ம் தேதி கிளம்ப இருந்தனர். கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை சார்பில், ‘வீரர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்’ என, அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இதனால் வீரர்கள் மீண்டும் அவரவர் வீடுகளுக்கு கிளம்பிச் சென்றனர். இதுகுறித்து நேற்று வங்கதேச உள்துறை அமைச்சர் அசாடுஜமானுடன், கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது,‘ வெளிநாட்டு பிரதமர்களுக்கு வழங்கப்படும் அளவுக்கு பாதுகாப்பு தரப்படும்,’ என, உறுதி கூறப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று வங்கதேசம் கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE