தூஸ்ரா முறையில் பந்து வீசக்கூடாது: தரிந்து கவுசாலுக்கு தடை விதித்த ஐ.சி.சி

317

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கவுசால் தூஸ்ரா முறையில் பந்து வீசக்கூடாது என ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளார் தரிந்து கவுசால். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் தூஸ்ரா பந்து வீச்சு மூலம் ஆட்டக்காரர்களை திணறடிப்பதில் வல்லவர்.

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்டின்போது இவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது.

இதனால் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழத்தில் கவுசால் தனது பந்து வீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று ஐ.சி.சி. வலியுறுத்தியது.

இதையடுத்து சென்னை வந்த அவர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழத்தில் பந்து வீசினார். அப்போது அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ஐ.சி.சி.யின் விதிமுறைக்கு மாறாக அவரது தூஸ்ரா முறை பந்து வீச்சு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் சர்வதேச போட்டிகளில் கவுசால் தூஸ்ரா முறையில் பந்து வீச ஐ.சி.சி. தடை விதித்தது.

எனினும் அவர் ஆப் பிரேக் முறையில் பந்து வீச எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

இலங்கை அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கவுசால் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE