வங்கதேச ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா ‘ஏ’ அணி: இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி

338

வங்கதேசம்- இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய ‘ஏ’ அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனால் வங்கதேச ‘ஏ’ அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச ‘ஏ’ அணி வருண் ஆரோன், ஜயந்த் யாதவ் ஆகியோரின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 228 ஓட்டங்களில் சுருண்டது.

சபீர் ரஹ்மான் (122) ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார். சுவகட்டா ஹொம் (62) அரைசதம் அடித்தார். வருண் ஆரோன், ஜயந்த் யாதவ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய ’ஏ’அணி 5 விக்கெட்டுக்கு 411 ஓட்டங்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. தவான் 150 ஓட்டங்கள் எடுத்தார். கருண் நார் (71), விஜய் சங்கர் (86) அரைசதம் அடித்தனர்.

இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச ’ஏ’ அணி தொடக்கத்திலே 2 விக்கெட்டை பறிகொடுத்தது. அனமுல் (0), செளமியா சர்கார் (19) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

வங்கதேச ’ஏ’ அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 36 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மொமினல் ஹக்யூ (9), லித்தன் டாஸ் (7) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று கடைசி மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. மொமினல் (54) அரை சதம் கடந்தார். லிட்டன் தாஸ் (38), சபிர் ரஹ்மான் (0) நிலைக்கவில்லை.

நாசிர் ஹொசைன் (1), சுவ்கடா (0) சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். பின் வந்தவர்களும் அடுத்தடுத்து வெளியேற, வங்கதேச ‘ஏ’ அணி இரண்டாவது இன்னிங்சில் 151 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது.

SHARE