பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இணையும் சமிந்த வாஸ், பிராட் ஹாட்டின்

324

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சமிந்த வாஸ், ஜோர்டன் கிரினிஜ் உள்ளிட்ட பலர் பயிற்சியாளராக இணைய உள்ளனர்.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில் இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ், மேற்கிந்திய தீவுகளின் ஜோர்டன் கிரினிஜ், இந்தியாவின் முன்னாள் சகலதுறை வீரர் ரொபின் சிங் உட்பட15 பயிற்சியாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இது பற்றி பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் தலைவர் நஜம் சேத்தி கூறுகையில், “15 பயிற்சியாளர்கள் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில பயிற்சியாளர்களை ஒப்பந்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

மேலும், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இணையும் போது உள்ளூர் வீரர்களின் விளையாட்டு திறனும் அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உலகக்கிண்ணம் வென்ற அவுஸ்திரேலிய அணியில் விக்கெட் கீப்பராக இடம்பெற்றிருந்த பிராட் ஹாட்டின் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளார்.

SHARE