ஆக்ரோஷமாக விளையாடலாம் ஆனால், அந்த ஆக்ரோஷம் தவறான நடத்தைக்கு கொண்டு சென்று விடக்ககூடாது- தோனி

331

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள வீராட் கோலி மைதானத்தில் ஆக்ரோஷமான செயல்படுவோம் என்று கூறினார். எதிரணி வீரர்களுக்கு எதிராக வீரர்கள் ஆக்ரோஷமான செயல்பட்டால்தான் அது அணியின் வெற்றிக்க உதவும் என்பது அவரது கருத்து. ஆனால், இலங்கை அணிக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடியதால் இசாந்த் சர்மா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கேப்டனாக உள்ள தோனி வீராட் கோலியின் ஆக்ரோஷமான சிந்தனைக்கு மாற்றான சிந்தனையுள்ளவராக உள்ளார்.

ஆக்ரோஷமாக விளையாடலாம் ஆனால், அந்த ஆக்ரோஷம் தவறான நடத்தைக்கு கொண்டு சென்று விடக்ககூடாது. அதில் இருந்து மாறுபட்டது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தோனி கூறுகையில் ‘‘ஆக்ரோஷம் என்பது சூடான வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதும், உடல்அளவில் இடித்துத்தள்ளுவதும் என்று அர்த்தம் கிடையாது. மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை திறமையான எதிர்கொண்டு விளையாடுவதுதான் ஆக்ரோஷம் ன்று டிராவிட் சொல்லியிருக்கிறார். ஆகவே, இதுவும் மிகவும் முக்கியமான ஒன்று. ஆக்ரோஷத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று இந்திய வீரர்கள் கற்று கொண்டிருப்பார்கள்.

இசாந்த் சர்மாவின் ஆக்ரோஷம் சிறந்ததுதான். ஆனால், அதே சமயம் நான் விதிமுறைகளை (நெறிமுறைகள்) கடைபிடிக்க வேண்டும். எந்தவொரு இடத்திலும் நாங்கள் ஒழுங்கின்மை நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவிற்கு செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட விரும்புகிறோம். ஆனால், வழிமுறை அடிப்படையுடன்’’ என்றார்.

இசாந்த் சர்மாவிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது குறித்து போட்டிக்குப்பின் கோலியிடம் கேட்டதற்கு, ‘‘எனக்கு அதை பற்றி எந்த நினைப்பும் இல்லை. அவர் அணியை வெற்றி பெற வைத்தார்’’ என்றார்.

ஆனால், தோனியோ ‘‘இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரீசாந்த் எதிரணி வீரர்களை சீண்டும் வேலையில் அடிக்கடி ஈடுபடுவார். அதனால் அவர் எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தும் என்ற பணியில் இருந்து தோல்வியடைந்து விட்டார்’’ என்று நினைவு கூர்ந்தார்.

SHARE