சுழற்பந்து வீச்சால் எங்களால் வெற்றி பெற முடியும்: உறுதியாகச் சொல்லும் டு பிளெசிஸ்

284

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை இமாச்சல் பிரதேசத்தில் நடைபெறுகிறது. தர்மசாலா ஆடுகள் வழக்கமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் நாளைய போட்டியில் வேகப்பந்து வீச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் டி20 போட்டிக்கான ஆடுகளம் போன்றுதான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இருந்தாலும் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதாக நம்புகிறேன். இதனால் சுழற்பந்து வீச்சும் முக்கிய காரணமாக இருக்கும் என தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளெசிஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து டு பிளெசிஸ் கூறுகையில் ‘‘எங்களுடைய சுழற்பந்து வீச்சால் போட்டியை வெல்ல முடியும் என்று அவர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். வெள்ளைப் பந்தில் சிறப்பாக பந்து வீசி போட்டியின் நிலைமையை மாற்றி உலகத்தின் சிறந்த பந்து வீச்சாளர் என்பதை நிரூபிப்பார். ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நாங்கள் முதலில் வேகப்பந்து மூலம் தாக்குதல் நடத்துவோம். பின்னர் இம்ரான் தாஹிர் தோள்கொடுத்து அணியை நடத்திச் செல்வார். ஒருநாள் போட்டியில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார் தாஹிர்.

மேலும், நாங்கள் மிகப்பெரிய சுழற்பந்து வீச்சு துறையை பெற்றுள்ளோம். டுமினி டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். மேலும் இளம் வீரரான எடி லெயி இம்ரான் தாஹிரின் ஆலோசனையை பெற்றுள்ளார். ஆகவே, நாங்கள் சுழற்பந்து மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.

ஏற்கனவே இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இம்ரான் தாஹிர் மிகந்த பாதிப்பை உருவாக்கக்கூடியவர். அவரை கவனமாக விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE