யாசீர் ஷா சுழலில் 128 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே: முதல் போட்டியில் பாகிஸ்தான் எளிதில் வெற்றி

300

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது,

இதில் டாஸ்  வென்ற ஜிம்பாப்வே அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் அசார் அலி, அகமது ஷேசாத் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 11 ரன்னிலும், ஷேசாத் 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அடுத்து வந்த மொகமது ஹபீஸ் 10 ரன்னில் வெளியேறினார்கள்.

அடுத்து வந்த சர்பிராஷ் அகமது 44 ரன்னிலும், சோயிப் மாலிக் 31 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதனால் பாகிஸ்தான் அணி 31.1 ஓவர்களில் 128 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது.

ஆனால் அதன்பின் வந்த மொகமது ரிஸ்வான் 75 ரன்களும், இமாத் வாசிம் 61 ரன்களும் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது.

260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாகிய சாரி, சிபாபா ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். ரன் அடிக்க இயலாவிட்டாலும், விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டனர். 9-வது ஓவரை இமாத் வாசிம் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சிபாபா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் 14-வது ஓவரில் சாரி 16 ரன்னிலும் யாசீர் ஷா பந்தில் ஆட்டம் இழந்தனர்.

இந்த இரண்டு விக்கெட்டுகளுக்குப் பிறகு ஜிமபாப்வே விக்கெட்டை யாசீர் ஷாவும், சோயிப் மாலிக்கும் பார்த்துக்கொண்டனர். இருவரது சுழலிலும் ஜிம்பாப்வே அணி 37 ஓவரில் 128 ரன்னுக்குள் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 131 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மசகட்சா (15), ஷிகந்தர் ரசா (19), சிகும்புரா (22), முதும்பானி (3), பயங்கரா (4) ஆகிய விக்கெட்டுகளை யாசீர் ஷா வீழ்த்தி மொத்தம் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

SHARE