வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் வாழும் மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது

502

பாரதிபுரம் கிராம மக்களை வெளியேறுமாறு உத்திரவிடப்பட்டுள்ளது

 

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் வாழும் மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு சிலரால் நேற்று (28.5) உத்திரவிடப்பட்டுள்ளமை தொடர்பாக தனக்கு மக்களால் முறையிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகவும் வறிய நிலையில் உள்ள ஐம்பது குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரதிபுரம் கிராமத்தில் வாழ்ந்துவருகின்றனர். குறித்த கிராமத்திலுள்ள தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் அமைச்சர் றிசாட் பதியுதீனும் அவருடைய கையாட்களும் கடந்தகாலங்களிலும் செயற்பட்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினரின் துணையுடன் பாகிஸ்தான் நாட்டவர்களுடன் பாரதிபுரம் கிராமத்துக்குச் சென்ற றிசாட் பதியுதீன் அந்த மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறும் தாம் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

SHARE