உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில்ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

1155

 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில்ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

banner1 teacher teachers-day Teachers-Day3

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், தனித்திறமை, ஊக்கம், தன்னம்பிக்கை,விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும்மாணவா்களுக்குச் சிறந்த முறையில் கற்பித்து, ஒருஉண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள்அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில்,செப்டம்பர் 06  ”ஆசிரியர் தினமாககொண்டாடுகிறோம்.வாழ்க்கை என்ற பாடத்தைக்  கற்றுத்தந்து, மாணவர்களுக்குஉண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொருமாணவரையும் சிறந்த மனிதனாக்குவது ஆசிரியர்கள் தான்.

கல்வித் தொடர்பாகமாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ,கல்வி சம்பந்தப்பட்டச் சிறப்பான நிகழ்வுகளையோநினைவுகூறும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதுஇல்லை. வாழ்க்கைக்குத் தேவையான சிறப்பான நற்கருத்துகள்அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களைசிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்டதெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற,தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும்போதாது. கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்கவேண்டும். அவர்தான் உண்மையான ஆசிரியர்.

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி. பிறஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக ஒரு நல்ல ஆசிரியரால்எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதைத் தமது இறுதிகாலம் வரை வாழ்ந்து காட்டி, மாபெரும் தத்துவமேதையாகஉலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளிராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம்நாளை 1962 ஆம் ஆண்டு முதல் வருடம்தோறும் ஆசிரியர்தினமாகக் கொண்டாடி வருகின்றோம்.

திருத்தணியில் பிறந்த இராதாகிருஷ்ணன், தெலுங்குமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவர் தனதுஇளமைக்காலத்தில் திருத்தணியிலும், திருப்பதியிலும்வாழ்ந்தார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில்முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராகப்பணியாற்றியதால் இவர் பிறந்த தினமா செப்டம்பர் 06 நாள்ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டுஇவருக்குப்பாரத ரத்னாவிருது வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும், செப்டம்டர் 06 ஆம் தேதிகொண்டாடப்பட்டு வரும்ஆசிரியர் தினநன்னாளில் பள்ளிகள்மற்றும் கல்லூரிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி எனப்பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள்வழங்குவார்கள். மேலும் சிறந்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும்வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப்பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப்பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி,வாழ்த்துக்களைத் தெரிவிப்பர்.

ஒரு மனிதனை அவனுக்கு அடையாளம் காட்டுபவராக இருப்பவர்தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்குத்தேவையானதை அவர்களுக்குக் கற்றுத்தந்து, அவனைநல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞனாக,மேதையாக உயர்த்தும் உன்னத்தைப் பணி ஆசிரியர் பணிஎன்பதை யாராலும் மறுக்க இயலாது.

ஒரு ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கானஎடுத்துக்காட்டாகத் தம் பணியை நேசித்து அர்ப்பணிப்புஉணர்வுடன் வாழ்ந்துகாட்டிய டாக்டர்.இராதாகிருஷ்ணன்அவர்களை இவ்வேளையில் ஒப்புநோக்கித் தம் பணியைசீர்த்தூக்கிப் பார்ப்பது ஒவ்வோர் ஆசிரியரின் கடமையாகும்.

தமது வாழ்க்கையை செம்மைபடுத்திய  ஆசிரியர்களைநன்றியுடன் எண்ணிப்பார்ப்பது மாணவர்களின் கடமையாகும்.

ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும்இதயம் கனிந்த ஆசிரியர் தினநல்வாழ்த்துக்கள்.

SHARE