கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட இரணைதீவுப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேற விருப்பம் தெரிவித்துள்ள 325 வரையிலான குடும்பங்களை மீண்டும் அப்பிரதேசத்திலேயே மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (30) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.
கடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட இரணைதீவுப் பகுதி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக இன்றை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், தங்களை அப்பகுதியில் தொழில் செய்வதற்கான அனுமதியினைப் பெற்றுத் தரும்படி தன்னிடம் கோரிக்கை முன்வைத்ததாக பூநகரிப் பிரதேச செயலாளர் சி.சத்தியசீலன், தெரிவித்தார்.
SR